June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் மேலும் 35,662 பேருக்கு கொரோனா; 281 பேர் சாவு

1 min read

Corona for a further 35,662 people in India; 281 deaths

18.9.2021

இந்தியாவில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 35 ஆயிரத்து 662 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. 281 பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-

இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 35 ஆயிரத்து 662 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை 25,404 பேருக்கும், புதன்கிழமை 27,176 பேருக்கும், வியாழக்கிழமை 30,570 பேருக்கும், வெள்ளிக்கிழமை 34,430 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இதனால், இந்தியாவில் இதுவரை கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 34 லட்சத்து 17 ஆயிரத்து 390 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 40 ஆயிரத்து 639 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 33 ஆயிரத்து 798 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 26 லட்சத்து 32 ஆயிரத்து 222 ஆக அதிகரித்துள்ளது.

281 பேர் சாவு

கொரோனா தாக்குதலுக்கு ஒருநாளில் 281 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 44 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 2.5 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *