May 1, 2024

Seithi Saral

Tamil News Channel

மத்திய பிரதேசத்திர் இருந்து எல். முருகன் எம்.பி. ஆகிறார்

1 min read

Union Minister L. Murugan is contesting from Madhya Pradesh

18.9.2021

நாடாளுமன்ற மேலவை தேர்தலுக்கான வேட்பாளராக மத்திய இணை மந்திரி எல். முருகன் பாரதீய ஜனதா சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் மத்திய பிரதேசத்தில் இருந்து எம்.பி.யாகிறார்.

எல்.முருகன்

நாடாளுமன்ற மேலவை தேர்தலுக்கான வேட்பாளர்களை பாரதீய ஜனதா அறிவித்து உள்ளது. இதன்படி, மத்திய மந்திரி சர்பானந்தா சோனோவால் அசாமில் இருந்து வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இதேபோன்று மத்திய இணை மந்திரி எல். முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து பாரதீய ஜனதா சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

தமிழக பாரதீய ஜனதா முன்னாள் தலைவராக எல். முருகன் பதவி வகித்திருந்த காலத்தில் சிறப்புடன் செயல்பட்டதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடியின் மந்திரிசபை விரிவாக்கத்தில் அவர் மத்திய இணை மந்திரியாக்கப்பட்டார்.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்படாத சூழலில், மேலவை உறுப்பினர் தேர்தலில் எல். முருகன் போட்டியிடுகிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.