June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

எல்.முருகன், கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் போட்டியின்றி தேர்வு

1 min read

L. Murugan, Kanimozhi Somu, Rajeshkumar selected without contest

28.9.2021
மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன், கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

எல்.முருகன்

மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக எல்.முருகன் பாஜக சார்பில் நிறுத்தப்பட்டார். இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த 21 ஆம் தேதி மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் முன்னிலையில் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற இருந்த நிலையில், மத்திய இணைய அமைச்சர் எல் முருகன் போட்டியின்றி எம்பியாக தேர்வாகியுள்ளார். வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் எல் முருகன் போட்டியின்றி மாநிலங்களவை எம்பியாக தேர்வான சான்றிதழ் வழங்கப்பட்டது.

கனிமொழி சோமு

அதேபோல் மாநிலங்களவை எம்.பி.க்களாக தி.மு.க.வைச் சேர்ந்த கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம் மாநிலங்களவையில் திமுக எம்.பிக்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *