May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் மேலும் 19,740 பேருக்கு கொரோனா; 248 பேர் சாவு

1 min read

Corona for a further 19,740 in India; 248 deaths

9/10/2021

இந்தியாவில் மேலும் 19,740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 248 பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.

அதன்படி, இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 39 லட்சத்து 35 ஆயிரத்து 309 ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 23 ஆயிரத்து 70 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 48 ஆயிரத்து 291 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 643 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு ஒரே நாளில் 248 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரத்து 375 ஆக அதிகரித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.