May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை கலங்கவைத்த பெண்/நகைச்சுவை கதை

1 min read

Kannayiram Woman / comedy story by Thabasukumar

9/10/2021
கண்ணாயிரத்தை தேடி கவுசல்யா என்ற பெண் தனது நான்குவயதுமகனுடன் வந்திருந்தாள். கண்ணாயிரம் என் கணவர், இந்தசிறுவன் அவர் மகன் என்று சொல்லி யதால் கண்ணாயிரத்தின் மனைவிபூங்கொடி ஆத்திரம் அடைந்து அழுதார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கண்ணாயிரமா இந்த தவறைசெய்தது வரட்டும் கேட்போம் என்று காத்திருந்தனர். இதை எதையும் அறியாமல் வாக்கிங் சென்ற கண்ணாயிரம் ஏழரை மணிக்குள் வீட்டுக்கு சென்றுவிடவேண்டும் என்று வேகவேகமாக வீட்டைநோக்கி நடந்தார். ஆனால் அவர் வீட்டை அடைந்தபோது மணிஏழரையை கடந்துவிட்டது. வீட்டுமுன்நிறைய பேர்திரண்டிருப்பதை பார்த்து கண்ணாயிரம் திடுக்கிட்டார்.
என்ன பிரச்சினை என்றவாறு வீட்டை நெருங்கினார். அவரை எல்லோரும் ஒருமாதிரி யாக பார்த்தார்கள். புதிதாக ஒரு பெண்ணும் ஒருசிறுவனும் நிற்பதை பார்த்து கண்ணாயிரம் உற்சாகமடைந்தார்.
என்ன கவுசல்யா எப்படி இருக்க? என்று அந்த பெண்ணைபார்த்து கேட்டார்.
அவள் பதில் சொல்லவில்லை. உடனே அந்த பெண்ணின் அருகில் நின்ற சிறுவனை பார்த்து ஏய் சுரேசு நல்லா இருக்கியா? பாத்து ஆறுமாசமாச்சு.. வா உனக்கு பிடிச்ச கடலைமிட்டாய் வாங்கித்தருரேன் என்று அந்த சிறுவனை பக்கத்தில் உள்ள கடைக்கு அழைத்து சென்றார்.
கடைக்காரர் ஆச்சரியத்துடன் என்ன கண்ணாயிரம் அண்ணே பையன்யாரு என்று கேட்டார். கண்ணாயிரம் சிரித்தபடி நம்ம பையன்தான் என்றார். கடைக்காரர் அதிர்ச்சியுடன் என்ன நம்ம பையனா,… புரியலையே என்று இழுத்தார்.
ஓ என்ன புரியலையா.. நான் தமிழில்தானே சொன்னேன்… சரி. கடலை மிட்டாய் கொடு என்று மீண்டும் கேட்டார்.
கடைக்காரர் அந்த சிறுவனை நன்றாக உற்றுப்பார்த்துவிட்டு கடலை மிட்டாயை கொடுத்தார். கண்ணாயிரம் வாங்கி அந்த சிறுவனிடம் கொடுத்தார். அவன் வாங்கி கடித்து தின்ன ஆரம்பித்தான். கடைக்காரர் கடலைமிட்டாய்க்கு காசு என்றார்.
கண்ணாயிரம் சிரித்துக்கொண்டே கணக்கில் எழுதிக்கிடுங்க என்று சொல்லிவிட்டு சிறுவனுடன் மீண்டும் வீட்டுக்குவந்தார். எல்லோரும் அவரை எரித்துவிடுவதுபோல பார்த்தார்கள். கண்ணாயிரம் என்ன நடந்தது என்று புரியாமல் அங்கிருந்த முதியவரிடம் என்ன எல்லோரும் என்ன தேடிவந்திரிக்கீங்க யாருக்கும் பிரச்சினையா என்று கேட்டார்.
முதியவர் உடனே கண்ணாயிரம் இதோ நிக்குதே இந்த பொண்ணு யாரு தெரியுமா என்றார்.
கண்ணாயிரம் இதோ தெரியாதா கவுசல்யா என்று சொன்னார்.
அது சரி, இது யார் பொண்டாட்டி என்று முதியவர் மீண்டும் கேட்டார்.
கண்ணாயிரம் சிரித்தபடி அதுவா கண்ணாயிரம் பொண்டாட்டி என்றார்.
முதியவர் கண்ணாயிரத்தை பார்த்து சிரிக்கவா செய்யுற என்று முறைத்தார்.
கண்ணாயிரம் ஏன் முறைக்கிறீங்க என்றார். முதியவர் உடனே முறைக்காம என்ன செய்வாங்க என்று சொன்னார். கண்ணாயிரம் பதிலுக்கு விளக்கமா கேளுங்க முறைச்சா எப்படி என்று கேட்டார்.
உடனே ஒரு பெண், நான் விளக்கமா கேட்கிறேன்.. இந்த சின்னபையனின் அப்பா பெயர் என்ன என்றார். இதுதான் பிரச்சினையா. இந்த பையனின் அப்பா பெயர் கண்ணாயிரம். போதுமா என்று சொன்னார்.
முதியவர் கோபத்தின் உச்சிக்கு சென்று, இன்னும் விளக்கமா இவன்கிட்ட கேட்கணும்.. ஏய் இந்த சின்ன பையன் பிறக்க யார் காரணம் சொல்லு என்றார். கண்ணாயிரம் உடனே நான்தான் காரணம் என்றார்.
இதை கேட்டதும் கண்ணாயிரம் மனைவி ஓ.. என்று அழுதபடி இனி நான் என்ன செய்வேன். இப்பவே நான் என் அப்பாக்கிட்டபோறேன். அவர்தான் இதற்கு நியாயம் சொல்லணும். கண்ணாயிரம் நல்ல பையன், முறைபையன் அப்படின்னு கட்டிவைச்சார். அவரை கூட்டிட்டு வர்றேன் என்று கிளம்பினார்.
கண்ணாயிரம் அதிர்ச்சியுடன் ஏய் ஒரு சின்ன விசியத்துக்கு இப்படி கோபப்படுறீய என்று மனைவியை சமாதானப்படுத்தினார். அவர் மனைவி. ஆத்திரத்தில் என்ன சின்னவிசியமா.நான் எங்க அப்பாவீட்டுக்குபோறன் என்று அழுதார்.
கண்ணாயிரம் என்ன எதை சொன்னாலும் பிரச்சினையா இருக்கு என்று யோசித்தார். அப்போது அவரது மனைவி பெட்டியை தூக்கிகொண்டு அவரது அப்பாவீட்டுக்குபுறப்பட்டார்.
கண்ணாயிரம்.. அவர் மனைவியை தடுத்தார். நான் சொல்லுறதை கேளு. அங்க போகாத அந்த மீசைக்காரர் வந்தா ஓண்ணும் இல்லாததை பெரிசாக்கிடுவாரு. அங்கே போகாதே என்றார். கண்ணாயிரம் மனைவி எங்க அப்பாவை தப்பா சொல்லுறீங்களா. அவர் பஞ்சாயத்துன்னா ஊரே அதிரும். இங்கே பஞ்சாயத்துவைச்சாதான் சரிவரும்.ஊருக்கெல்லாம் பஞ்சாயத்து பேசுற எங்க அப்பா சொந்த மகள் பிரச்சினைக்கு பஞ்சாயத்து பேசவேண்டியதுவந்துட்டே என்று கண்களை கசக்கினார்.
அப்போது அங்கு ஒரு ஆட்டோவந்தது. அதில் ஏறிச்செல்ல கண்ணாயிரம் மனைவி கைகாட்டினார். ஆட்டோநிக்காமல் சென்று விட்டது. கண்ணாயிரம் உடனே கோபப்படாதே. உன்னை ஏத்துனா ஆட்டோதாங்காது என்று என்றார்.
அவர் மனைவி பற்களை நர, நர வென்று கடித்தார். அந்த நேரத்தில் ஒரு பஸ் வந்தது. கண்ணாயிரம் மனைவி பஸ்சில் ஏறி தன் அப்பா வீட்டுக்கு பறந்தார். கண்ணாயிரம் தன் மீசைக்கார மாமாவை நினைத்து நடுங்கினார். அவர் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பேசுவார். கையில் அரிவாள் வேறு வைச்சிருப்பாரு.. என்ன பண்ணலாம் என்று யோசிக்க தொடங்கினார். கவுசல்யா வையும் சிறுவன் சுரேசையும் பரிதாபமாக பார்த்தார். அப்போது மோட்டார் சைக்கிள் வாலிபர் வேகமாக அங்கு வந்து என்ன பிரச்சினை என்று விசாரித்தார். அவரும் கண்ணாயிரத்தை முறைத்துபார்த்தார்( தொடரும்)
-வே. தபசுக்குமார். புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.