June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்ற பா.ஜ.க. பிரமுகர்

1 min read

The BJP won only one vote. Celebrity

12.10.2021
கோவை குருடம்பாளையம் 9வது வார்டு இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இங்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே வாங்கியுள்ளார்.

கோவையில் கடந்த 9ம் தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்காக தேர்தல் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் குருடம்பாளையம் 9வது வார்டு இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இங்கு போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்தவர் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே வாங்கியுள்ளார்.

இங்கு திமுகவைச் சேர்ந்த வேட்பாளர் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். அதிமுகவை சேர்ந்த வேட்பாளர் 196 வாக்குகள் பெற்றுள்ளார். அங்கு மொத்தம் 910 வாக்குகள் பதிவாகி இருந்தது.

ஒரே ஒரு ஓட்டு வாங்கிய பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் கார்த்திக் குடும்பத்தில் 5 பேர் உள்ளனர். இது தவிர அவருக்கு உறவினர்கள், நண்பர்கள், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கட்சி தொண்டர்கள் என பலர் இருந்தும் அவர் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் அவர் வீடு இருக்கும் வார்டு பகுதியில் அவர் நிற்கவில்லை என்றும் அதனால்தான் அவரது குடும்பத்தினர் ஓட்டு அவருக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் அவர் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு நின்றதால் அவருக்கு கட்சி சின்னம் கிடையாது என்றும் குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *