இந்தியாவில் ஒரே நாளில் 15,823 பேருக்கு கொரோனா; 226 பேர் சாவு
1 min read
Corona for 15,823 people in a single day in India; 226 deaths
13/10/2021
இந்தியாவில் இன்று கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. ஒரே நாளில் புதிதாக 15,823 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 226 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வந்தது. இதன்படி கடந்த திங்கட்கிழமை 18,132 பேருக்கும், நேற்று 14,313 பேருக்கும் வைரஸ் பாதிப்புகள் பதிவான நிலையில், இன்று சற்று உயர்ந்து புதிதாக 15,823 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் இன்றுறு காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15 ஆயிரத்து 823 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (கேரளாவில் மட்டும் 7,823 பேர்) இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,40,01,743 ஆக அதிகரித்துள்ளது.
226 பேர் சாவு
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 226 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,51,189 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 22,844 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,33,42,901 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 2,07,653 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 96,43,79,212 பேருக்கு (இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 50,63,845 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 13,25,399 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 58,63,63,442 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.