இந்தியாவில் ஒரே நாளில் 12,830 பேருக்கு கொரோனா; 446 பேர் சாவு
1 min read
Corona for 12,830 people in a single day in India; 446 deaths
31.10.2021-
இந்தியாவில் ஒரே நாளில் 12,830 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 446 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. இதுவரை உலக அளவில் 24.71 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 15 ஆயிரத்துக்குள் வந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஏறுமுகம் கண்டது. இந்த நிலையில், இன்று இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இந்தியாவில் இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 830 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
446 பேர் சாவு
மேலும் இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 446 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,57,740 லிருந்து 4,58,186 ஆக உயர்ந்துள்ளது.
நாடுமுழுவதும் ஒரு நாளில் 14,667 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,36,41,175 லிருந்து 3,36,55,842 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 98.20 சதவீதமாகவும் உயிரிழப்பு விகிதம் 1.34 சதவீதமாகவும் உள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,59,272 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று காலைவரை கடந்த 247 நாட்களில் இல்லாத அளவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 106.14 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.