June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் மேலும் 12,885 பேருக்கு கொரோனா; 461 பேர் சாவு

1 min read

Corona for a further 12,885 in India; 461 people Death

4.11.2021
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 885 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 461 பேர் இறந்துள்ளனர்.

இது நேற்றைய பாதிப்பான 11 ஆயிரத்து 903-ஐ விட அதிகம் ஆகும். இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 43 லட்சத்து 21 ஆயிரத்து 25 ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 15 ஆயிரத்து 54 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 37 லட்சத்து 12 ஆயிரத்து 794 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 579 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு ஒருநாளில் 461 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 59 ஆயிரத்து 652 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 30 லட்சத்து 90 ஆயிரத்து 920 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் பொதுமக்களுக்கு இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 107 கோடியே 63 லட்சத்து 14 ஆயிரத்து 440 ஆக அதிகரித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *