தமிழகத்தில் இன்று 756 பேருக்கு கொரோனா; 14 பேர் சாவு
1 min read
Corona for 756 people in Tamil Nadu today; 14 dead
21.11.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 765ல் இருந்து 756 ஆக சற்று குறைந்துள்ளது. 14 பேர் உயிரிழந்து உள்ளனர். 847 பேர் குணமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,00,767 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 756 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,20,271 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 5,33,58,226 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 445 பேர் ஆண்கள், 311 பேர் பெண்கள். தமிழகத்தில் 847 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிஉள்ளனர். தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,75,174 ஆக உயர்ந்துள்ளது.
14 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 14 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 7 பேரும் அரசு மருத்துவமனையில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,375 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக இருந்த நிலையில் இன்று 112 ஆக குறைந்துள்ளது.
கோவையில் 130 பேருக்கும், ஈரோட்டில் 80 பேருக்கும், செங்கல்பட்டில் 56 பேருக்கும், திருப்பூரில் 49 பேருக்கும், நெல்லையில் 8 பேருக்கும், தூத்துக்குடியில் 8 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.