June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: மு.க ஸ்டாலின் அறிவிப்பு

1 min read

Rs 1 crore fund for murdered SI Bhuminathan’s family: MK Stalin’s announcement

21.11.2021
கொலை செய்யப்பட்ட பூமிநாதன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கொலை

புதுக்கோட்டை அருகே கீரனூரில் ஆடு திருடியவர்களை துரத்திச் சென்று பிடிக்க முற்பட்ட போது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க ஸ்டாலின் மேலும் கூறுகையில், “ரோந்து பணியில் இருக்கும் போது எஸ்.ஐ மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்று மிகுந்த துயரம் அடைந்தேன். பூமிநாதன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *