தமிழகத்தில் இன்று 731 பேருக்கு கொரோனா; 6 பேர் சாவு
1 min read
Corona for 731 people in Tamil Nadu today; 6 deaths
4.12.2021
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 711 ல் இருந்து 731ஆக சற்று அதிகரித்துள்ளது. 6 பேர் உயிரிழந்து உள்ளனர். 753 பேர் குணமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக இன்று சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 1,06,505 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 726 பேரும் , மேற்கு வங்கம்- 3, பீகார் -1 என வெளி மாநிலத்திலிருந்து வந்த 4 பேர் மற்றும் வெளிநாட்டிலிருந்து(இங்கிலாந்து) வந்த ஒருவர் உள்பட 731 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,29,792 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 5,46,81,905 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 422 பேர் ஆண்கள், 309 பேர் பெண்கள். தமிழகத்தில் இன்று 753 பேர் கொரோனாவால் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளார். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,85,203 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 6பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,519 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக இருந்த நிலையில் இன்று 136 ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் 130 பேருக்கும், ஈரோட்டில் 57 பேருக்கும், செங்கல்பட்டில் 54 பேருக்கும், திருப்பூரில் 50 பேருக்கும், நெல்லையில் ஒருவருக்கும், தூத்துக்குடியில் 3 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கொரோனா இல்லை.