August 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தென் ஆப்ரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அதிகரிப்பு

1 min read

Increased corona infection in children in South Africa

4/12/2021

தென் ஆப்ரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளது. குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் தென் ஆப்ரிக்காவில் 16 ஆயிரத்து 55 பேர் பாதிக்கப்பட்டனர், 25 பேர் உயிரிழந்தனர். ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டார்களா? அல்லது ஒமைக்ரானால் உயிரிழந்தார்களா? என்பது உறுதியாகவில்லை.

ஆனால், கடந்த காலத்தில் டெல்டா வைரஸால் அதிகமான அளவு மருத்துவமனையில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் மூன்றாவது அலையில் 5 வயதுக்குட்டபட்ட குழந்தைகள், 15 வயது முதல் 19 வயதுள்ளவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். அந்த அளவுக்கு குழந்தைகள் பாதிக்கப்படவில்லை என்றாலும், அதிகமான பாதிப்பு குழந்தைகளுக்கு இருக்கிறது.

தென் ஆப்ரிக்க சுகதாார துறை அமைச்சகத்தின் பரவக்கூடிய நோய்களுக்கான தேசிய ஆய்வு மையத்தின் மருத்துவர் வாசிலா ஜாஸட் கூறியதாவது:-

4வது அலை

தென் ஆப்ரிக்காவில் நான்காவது கொரோனா அலை துவங்கியுள்ளது. அனைத்து வயதுப் பிரிவினரும் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. ஆனால், குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடுத்ததாக இரண்டாவது அதிக பாதிப்பு குழந்தைகளுக்கு தான் இருக்கிறது.

கடந்த காலங்களில் நாங்கள் பார்த்ததைவிட இப்போது வித்தியாசமாக இருக்கிறது. தென் ஆப்ரிக்காவின் 9 மாகாணங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மருத்துமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

குழந்தைகளுக்கு…

பரவக்கூடிய நோய்களுக்கான தேசிய ஆய்வு மையத்தின் மருத்துவர் மைக்கேல் க்ரூம் கூறியதாவது:

குழந்தைகளுக்கு திடீரென தொற்று அதிகரித்துள்ளது குறித்து தீவிரமான ஆய்வு தேவை. நான்காவது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம். இதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் எந்த பிரிவினர் பாதிக்கப்படுவார்கள் என்பது வரும் வாரங்களில் தெரியும். குழந்தைகளுக்கான படுக்கைகள், செவிலியர்கள், மருந்துகள், ஐ.சி.யு.,க்கள் ஆகியவற்றை தயார் செய்வது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *