இந்தியாவில் மேலும் 8,603 பேருக்கு கொரோனா; 415 பேர் சாவு
1 min read
Corona for another 8,603 in India; 415 deaths
4/12/2021
இந்தியாவில் நேற்றைய தினத்தை ஒப்பிடும்போது இன்று கொரோனா பாதிப்பு சற்று குறைவாக பதிவாகியுள்ளது. நேற்று 8 ஆயிரத்து 603 பேருக்கு கொரோனா பதிவாகி இருந்தது. 415 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.
அதன்விவரதம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 603 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது கடந்த வியாழக்கிழமை 9,765 பேருக்கு கொரோனா பதிவாகி இருந்தது. நேற்று காலையில் பாதிப்பான 9 ஆயிரத்து 216 பதிவாகி இருந்தது.
இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 46 லட்சத்து 24 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 8 ஆயிரத்து 190 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 53 ஆயிரத்து 856 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 99 ஆயிரத்து 974 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
415 பேர் சாவு
ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 415 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 70 ஆயிரத்து 530 ஆக அதிகரித்துள்ளது.