June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்துக்கு ரத்த பரிசோதனை/ நகைச்சுவை கதை

1 min read

Blood test of Kannayiram./ Story by Thabasukumar

8.12.2021
கண்ணாயிரம் மனைவி பூங்கொடியை பூனைகடித்ததால் அவருக்கு ஊசிபோடுவதற்காக ஆஸ்பத்திரிக்கு கண்ணாயிரம் அழைத்துசென்றார். அப்போது கண்ணாயிரத்துக்கு பிளட்டெஸ்ட்டு எடுக்கும்படி பூங்கொடி வற்புறுத்தினார். இதனால் பயந்து ஓடமுயன்ற கண்ணாயிரத்தை ஆஸ்பத்திரி ஊழியர்கள் அலாக்காக தூக்கி ஒருஅறைக்குள் கொண்டு சென்றனர். ஒரு நாற்காலியில் அமரவைக்கப்பட்ட கண்ணாயிரத்தை ஆஸ்பத்திரி ஊழியர்கள் இறுக்கிபிடித்துகொண்டனர். நர்ஸ் ஊசியுடன் நெருங்கிய போது கண்ணாயிரம் ஆ.. என்று கத்தினார். என்னங்க ஊசிபோடுமுன்னால கத்துறீங்க என்று நர்ஸ் சத்தம்போட்டபோது..
கண்ணாயிரம்.. கால், கால்.. என்று கத்தினார். என்ன காலா… என்று ரிங் டோன் எதுவும் வரலீயே வைப்பிரேசனுல போட்டிருக்கீங்களா… போனுக்கா இப்படி அலருதீங்க… என்று நர்ஸ்கேட்க..
கண்ணாயிரம்… அய்யோ என் காலைமிதிச்சிருக்காங்க.. கால். கால்.. என்றார்.
கண்ணாயிரத்தின் காலைமிதித்துகொண்டிருந்த ஊழியர் தவறை உணர்ந்து தன்காலை அங்கிருந்து தூக்கினார்.
அப்பாட.. என்கால்வீங்கிபோச்சு.. இதுக்கு மருந்து போடணும். எனக்கு கால்வலிக்கு, நாளைக்கு பிளட்டெஸ்ட்டு எடுக்கலாம்.. என்னைவிட்டுறங்க.. என்றார்.
ஆஸ்பத்திரி ஊழியர்கள் ம்.. டாக்டர் சொல்லிட்டாரு..இன்னைக்கு பிளட்டெஸ்ட்டு எடுத்தாகணும். நீங்க கொஞ்சம் கண்ணைமூடிக்கிங்க.. பிளட்டைஎடுத்துருவாங்க.. என்றனர். கண்ணாயிரம் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. கொஞ்சம் கையை நீட்டுங்க..என்று நர்ஸ்சொல்ல, கண்ணாயிரம் கையை நீட்டினார். அங்கே பாருங்க.. என்று நர்ஸ் சொன்னதும் கண்ணாயிரம் யாரோ வந்திருக்கிறார்கள் என்று நினைத்து வலபக்கமாக திரும்பிய வேளையில். கை நரம்பில் பஞ்சைதடவி ஊசியை குத்தி ரத்தத்தை எடுத்தார் நர்ஸ். பின்னர் ரத்தம் வந்த இடத்தில் பஞ்சைவைத்து அழுத்தியவர் அப்படியே பிடிச்சுக்குங்க என்றார்.
கண்ணாயிரம் கண்கலங்கியபடி கையில் ரத்தம்வந்த இடத்தில் வைக்கப்பட்ட பஞ்சை லேசாக தூக்கிப்பார்த்தவர். அம்மா.. எவ்வளவுரத்தம்.. என்றார்.
அவரிடம்.. பஞ்சைஎடுக்காதீங்க. அப்பதான் ரத்தம்வராம இருக்கும் என்றார் நர்ஸ். கண்ணாயிரம் சரி, என்றபடி கையில் பஞ்சை அழுத்திப் பிடித்தவாறு அந்த அறையை விட்டு வெளியேவந்தார்
.
பூங்கொடி.. அவரை பார்த்து.. என்ன அழுதுகிட்டுவாரீங்க.. என்று கேட்க.. கண்ணாயிரம்.. ரத்தத்தை எடுத்துப்புட்டாங்க..எனக்கு கைவலிக்குது.. என்று கண்களை கசக்கினார்.
உடனே பூங்கொடி. ஏங்க எனக்குத்தான் ஊசிபோட்டாங்க.. நான் அழவாசெய்யுறன். நீங்க.. சின்னபுள்ளமாதிரி அழுதுகிட்டுவாரீங்க.. என்று சத்தம் போட்டார்.
கண்ணாயிரம் உடனே உனக்கு ரத்தம் எடுக்கல..எனக்குதான ரத்தம் எடுத்தாங்க..அதில ஒருத்தர் கால மிதிச்சுட்டாரு.. அதுவேற வலிக்குது.. என்று கூறியவர் ஒருகாலை வளைத்துக் கொண்டுநடந்தார்.
பூங்கொடி அதை பார்த்து.. உங்களோடு ஒரே பிரச்சினையா போச்சு.. வாங்க ஆட்டோவில்ஏறுங்க.. என்றார். கண்ணாயிரம்.. மெல்ல, மெல்ல நடந்து ஆட்டோவில்ஏறினார். தள்ளி உட்காருங்க.. என்றபடி பூங்கொடியும் ஆட்டோவில்ஏற ஆட்டோ பறந்தது. வீடுவந்ததும். கண்ணாயிரம் ஆட்டோவிலிருந்து இறங்கி நொண்டியபடி வீட்டுகதவைதிறந்து உள்ளேபோனார். பூங்கொடி.ஆட்டோவுக்கு பணம்கொடுத்து விட்டு வீட்டுக்குள்வந்தார். கண்ணாயிரம் கால்வலிக்கு கைவலிக்கு என்றபடி கட்டிலில் அமர்ந்தார்.
பூங்கொடி மெல்ல.. என்னங்க காலிலகாட்டுங்க..என்றார். கண்ணாயிரம் வலதுகாலைகாட்டினார். லேசாவீங்கி இருந்தது. கைவைத்து அழுத்தினார்.கண்ணாயிரம்..அம்மா என்று கத்தினார். கொஞ்சம் வெந்நி ஒத்தடம் கொடுப்போம்.. சரியாயிடும் என்ற்பூங்கொடி வெந்நீர்வைக்க சென்றார். அப்பாட.. என்றபடி கண்ணாயிரம் கட்டிலில் படுத்துவிட்டார்.பூங்கொடி வெந்நீர்வைத்து ஒருபாத்திரத்தில் ஊற்றி கொண்டுவந்தார். கட்டிலுக்கு அடியில் வெந்நீர்பாத்திரத்தை வைத்துவிட்டு அதில் வெள்ளை துணியை நனைத்து கண்ணாயிரத்தின் வீங்கிய கால்பகுதியில்வைத்து ஒத்தடம் கொடுக்க, சூடு தாங்காத கண்ணாயிரம்.. அய்யோ.. சூடு.. அய்யோ சூடு என்று எழுந்திருக்க, கட்டிலுக்கு அடியில் இருந்த பாத்திரம் மீது கால்பட்டு அது உருள, அந்தவெந்நீர்பட்டு கண்ணாயிரம்.. அய்யோ. அய்யோ.. என்று அலற.. ஒரே.. சத்தம்.. அதைபார்த்த பூங்கொடி.. எதுக்கு கீழே இறங்கினீங்க..வெந்திபாத்திரம் இருந்தது கண்ணுக்குதெரியலையா.. உங்களோடு ஒரே அக்கப்போரா போச்சு… இனி வெந்நியும்கிடையாது, தண்ணியும்கிடையாது.. பேசாம படுங்க என்று கத்தினார்.
கண்ணாயிரம்.. வெந்நிசூடுகுறைவா வச்சிருக்கலாமுல்லா, இவ்வளவுசூடுவைச்சா… எப்படிதாங்கமுடியும்.. என்று பதிலுக்கு கத்தினார்.
பூங்கொடி.. ஏங்க.. ஒருசின்னவலிகூட உங்களால.. தாங்கமுடியாதா..எங்க அப்பா மேலே கல்வீசினீங்களே..அவருக்கு என்ன வலிவலிச்சிருக்கும்… என்று கேட்டார்.
உடனே.. அவர். அது என் தப்பில்ல.. உங்க. அப்பாசெய்த தப்பு.. அவர் குறுக்கேவந்ததால்தான் கல்பட்டுச்சு.. என்றார். பூங்கொடி.. அதை நம்பமுடியாது.நீங்க வேணுமுன்னு கல்வீசியிருக்கீங்க.. சும்மா சமாளிக்கீங்க என்றார்.
கண்ணாயிரம் ம்.. என்ன சொன்னாலும் நம்பமாட்டே.. பரவாயில்ல.. அருவா அமாவாசைக்கிட்ட சொல்லாதே..என்றார். பூங்கொடி..பார்ப்போம்..என்று தலையை ஆட்டினார். இப்போ கால்வலிக்கு தா என்றுகேட்க கண்ணாயிரம் இல்லை என்றார். ம்.. கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுங்க.. காலையிலே.. யூரின் டெஸ்ட், மோசன்டெஸ்ட் எடுக்கணும். என்றார் பூங்கொடி.
அதை கேட்டதும்.. மறுபடியும் டெஸ்ட்டா..என்று வாயை பிளந்தார் கண்ணாயிரம்.(தொடரும்)

  • வே. தபசுக்குமார். புதுவை

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *