தமிழகத்தில் இன்று 606 பேருக்கு கொரோனா; 11 பேர் சாவு
1 min read
Corona for 606 people in Tamil Nadu today; 11 people were killed
25.12.2021
தமிழகத்தில் இன்று 606 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 பேர் உயிரிழந்துள்ளனர். 685 பேர் குணமடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழகத்தில் 1,01,185 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 603 பேரும் ஐரோப்பிய நாடுகள், ஆப்ரிக்காவில் தலா ஒருவரும் மற்றும் இங்கிலாந்தில் இருந்து வந்த ஒருவர் என மொத்தம் 606 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,43,427 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 357பேர் ஆண்கள், 249 பேர் பெண்கள். 685 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,99,994 ஆக உயர்ந்துள்ளது.
11 பேர் சாவு
இன்று 11 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,725 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 146 ஆக இருந்த நிலையில் இன்று (டிச.,25 ம் தேதி) 165 ஆக சற்று அதிகரித்துள்ளது.
கோவைல் 87 பேருக்கும் செங்கல்பட்டில் 50 பேருக்கம், திருப்பூரில் 42 பேருக்கும், ஈரோட்டில் 41 பேருக்கும், நெல்லையில் 4 பேருக்கும், தென்காசியில் 3 பேருக்கும், தூத்துக்குடியில் 4 பேருக்கும்இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உ்ளளது.