June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 6,531 பேருக்கு கொரோனா; ஒமைக்ரான் 578 ஆக உயர்வு

1 min read

Corona for 6,531 newcomers in India; Rise to 578 microns

27.10.2021

இந்தியாவில் இந்தியாவில் புதிதாக 6,531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரு நாளில் 315 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். ஒமைக்ரான் பாதிப்பு 578 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு கடந்த சனிக்கிழமை 7 ஆயிரத்து 189 ஆக இருந்தது. இந்த பாதிப்பு நேற்று காலை மீண்டும் 7 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இதன்படி 6 ஆயிரத்து 987 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் நாட்டில் இன்று புதிதாக 6,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. (இதில் கேரளாவில் மட்டும் 1,824 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்).

இதுதொடர்பாக இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6 ஆயிரத்து 531 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,47,93,333 ஆக அதிகரித்துள்ளது.

315 பேர் சாவு

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 315 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,79,997 ஆக உயர்ந்துள்ளது. நேற்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 7,141 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,42,37,495 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.40 சதவீமாக உள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு 75,841 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,41,70,25,654 பேருக்கு (இன்று கலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 29,93,283 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான்

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்குநாள் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. மராட்டியத்தில் நேற்று புதிதாக 31 பேருக்கு ஒமைக்ரான் உறுதி ஆனது. இதனால் அங்கு ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல் கேரளாவில் 19 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. தெலுங்கானாவில் புதிதாக 3 பேருக்கும், ஆந்திராவில் 2 பேருக்கும், ஒடிசாவில் 4 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு நேற்று கண்டறியப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவில் தற்போதய நிலவரப்படி ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 578 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன்படி டெல்லியில் 142 பேருக்கும், மராட்டியத்தில் 141 பேருக்கும், கேரளாவில் 57 பேருக்கும், குஜராத்தில் 49 பேருக்கும், ராஜஸ்தானில் 43 பேருக்கும், தெலுங்கானாவில் 41 பேருக்கும், தமிழ்நாட்டில் 34 பேருக்கும், கர்நாடகத்தில் 31 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 9 பேருக்கும், ஆந்திராவில் 6 பேருக்கும், மேற்கு வங்காளத்தில் 6 பேருக்கும், அரியானாவில் 4 பேருக்கும், ஒடிசாவில் 4 பேருக்கும், சண்டிகாரில் 3 பேருக்கும், காஷ்மீரில் 3 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 2 பேருக்கும், இமாச்சல பிரதேசத்தில் ஒருவருக்கும், லடாக்கில் ஒருவருக்கும், உத்தரகாண்டில் ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் டெல்லியில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 142 பேரில் இதுவரை 23 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மராட்டிய மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 141 பேரில் இதுவரை 42 பேர் குணமடைந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *