June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

இசையமைப்பாளர் டி.இமான் விவாகரத்து

1 min read

Divorce of composer D.Iman

29/12/2021
இசையமைப்பாளர் டி.இமான் தானும் தனது மனைவியும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் இமான்

தமிழ் சினிமா உலகில் முன்னணி இசை அமைப்பாளராக இருப்பவர் டி.இமான். இவருக்கும் மோனிகா ரிச்சர்ட்டுக்கும் கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் டி.இமான், தனது மனைவியும் தானும் சட்டரீதியாக விவாகரத்து பெற்றுவிட்டதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த தகவல் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

வாழ்க்கை நம்மை பல்வேறு பாதைகளுக்கு இட்டுச் செல்லும். அந்த வகையில் எனது மனைவி மோனிகா ரிச்சர்டும் நானும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். இனி நாங்கள் கணவன்-மனைவி இல்லை.

எனது நலன் மீது அக்கறை கொண்டவர்கள், இசை ரசிகர்கள், ஊடகத்துறையினர் அனைவரும் எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து, வாழ்க்கையில் நாங்கள் முன்னோக்கிச் செல்ல உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் புரிதலுக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *