June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

1 min read

Union Cabinet meeting tomorrow chaired by Prime Minister Modi

18.1.2022

பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

பட்ஜெட் கூட்டம்

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் வருகிற 31-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கிடையில், பிப்ரவரி 1 ஆம் தேதி 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்ஜெட் கூட்டத் தொடரானது இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரானது வருகிற 31 ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 11ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட கூட்டத் தொடரானது மார்ச் 11-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுளது.

நாளை நடக்கிறது

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் 19.01.2022 நாளை (புதன்கிழமை) டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நாட்டின் பொருளாதார விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *