May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 29,976 பேருக்கு கொரோனா்; 47 பேர் சாவு

1 min read

Corona to 29,976 people in Tamil Nadu today; 47 dead

26.1.2022
தமிழகத்தில் இன்று 29,976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டு உள்ளது. 47 பேர் உயிரிழந்துள்ளனர். 27,507 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 30,055 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 29,976 ஆக சற்று குறைந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் 1,50,931 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 29,958 பேர், வங்கதேசம் 4, ஆந்திர மாநிலம் 7, கர்நாடகா, மேற்குவங்கம் சென்று திரும்பிய தலா இருவரும், அசாம், ஜார்கண்ட் மற்றும் கேரள மாநிலங்களுக்கு சென்று திரும்பிய தலா ஒருவர் என மொத்தம் 29,976 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32,24,236 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 6,10,54,111 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 17,147 பேர் ஆண்கள், 12,829 பேர் பெண்கள். தமிழகத்தில் 27,507 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29,73,185 ஆக உயர்ந்துள்ளது.

47 பேர் சாவு

தமிழகத்தில் இன்று 47 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,359 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,241 ஆக இருந்த நிலையில் இன்று (ஜனவரி 26 ம் தேதி) 5,973ஆக சற்று குறைந்துள்ளது.

கோவையில் 3740 பேருக்கும், செங்கல்பட்டில் 1883 பேருக்கும், ஈரோட்டில் 1302 பேருக்கும், கன்னியாகுமரியில் 1035 பேருக்கும், சேலத்தில் 1457 பேருக்கும், திருப்பூரில் 1787 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நெல்லையில் 612 பேருக்கும், தென்காசியில் 373 பேருக்கும், தூத்துக்குடியில் 347 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று தூத்துகுடியில் 2 பேரும், தென்காசியில் ஒருவரும் இறந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.