June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

வாகா எல்லையில் குடியரசு தின கொண்டாட்டம்; இனிப்பு பரிமாற்றிக் கொண்ட இருநாட்டு வீரர்கள்

1 min read

Republic Day celebration at the Wagah border; Bilateral players with a sweet exchange

26/1/2022

வாகா எல்லையில் குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி இருநாட்டு வீரர்கள் இனிப்பு பரிமாற்றிக் கொண்டனர்.

நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு இது. இந்த ஆண்டில் இன்று தலைநகர் டெல்லியில் 73வது குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைநகர் புதுடெல்லியில் உள்ள ராஜபாதையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது. நாடு முழுவதும் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள சர்வதேச வாகா எல்லை பகுதியில் குடியரசு தின கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது எல்லையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இருநாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

பஞ்சாப்பில் உள்ள வாகா எல்லை மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஊரி எல்லை பகுதிகளில் இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *