May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒருநாளில் 2,51,209 பேருக்கு கொரோனா; 627 பேர் சாவு

1 min read

Corona to 2,51,209 people a day in India; 627 deaths

28/1/2022

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்தது. ஒரே நாளில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 209 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 627 பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் லட்சங்களில் பதிவாகி வருகிறது. கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக பதிவாகி வந்த நிலையில் இன்றைய தொற்று பாதிப்பு நேற்றை தினத்தை விட சற்று சரிந்துள்ளது.

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 209 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

627 பேர் சாவு

கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 627 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 3 லட்சத்து 47 ஆயிரத்து 443 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 21 லட்சத்து 05 ஆயிரத்து 611 ஆக உயர்ந்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 15.88 சதவிகிதமாக உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.