November 5, 2026

Seithi Saral

Tamil News Channel

விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு காய்கறிகள் தொகுப்பு- ஆட்சியர் தொடங்கி வைத்தார்

1 min read

Special vegetable package scheme launched by the Collector in Virudhunagar district

5.11.2026
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை சுய சேவை பிரிவு அங்காடியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 10 வகையான காய்கறிகள் ரூ.100/-க்கு விற்பனை செய்யும் வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி நேற்று(05.11.2026) தொடங்கி வைத்தார்.

அவர் தெரிவித்ததாவது:-

தீபாவளி பண்டிகையைப் பொதுமக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அன்றாடச் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கில், 10 வகையான காய்கறிகள் அடங்கிய “வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு” ஒன்று ரூ.100/- என்ற சலுகை விலையில், கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகளில் விற்பனை செய்யும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இந்த தொகுப்பில் பெரிய வெங்காயம் (500 கிராம்), தக்காளி (500 கிராம்), கத்தரிக்காய் (250 கிராம்), உருளைக்கிழங்கு (250 கிராம்), கோரட் (200 கிராம்), பீன்ஸ் (200 கிராம்), பச்சை மிளகாய் (100 கிராம்), எலுமிச்சை (100 கிராம்), இஞ்சி (50 கிராம்), தேங்காய் (400-450 கிராம்) ஆகியவை இதில் அடங்கும். மேலும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து கிடைப்பதற்கு அரசின் சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் வாயிலாக குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை பெற்று பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கூட்டுறவு சங்க அலுவலர்கள் மற்றும் பணியாளர்களஉட்பட பலர் கலந்துகொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *