May 8, 2024

Seithi Saral

Tamil News Channel

புத்தகத்தில் கழுதையை தேடிய கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை

1 min read

Kannayiram looked up “Where is donkey in the book” STory by Thabasukumar

30.1.2022
கண்ணாயிரம் வீட்டில் டி.வி பார்த்துகொண்டிருந்த போது முக்கிய குற்றவாளி பிணையில் வருவதாக செய்திவாசிக்கப்பட்டது.அதை சரியாக கேட்காத..கண்ணாயிரம்..கழுத்தில் மாலை போல் துண்டுபோட்டவரை அரிவாளால் வெட்டிய ரவுடிதான் ஜெயிலில் இருந்து வெளிவரபோகிறார் என்று நினைத்து அய்யோ என்னை வெட்டவாரான் என்று கத்தினார்.
பூங்கொடி உடனே..என்ன செய்தியை பாத்திங்க..இப்படி பயப்படுறீங்க…திருப்பி அந்த செய்தி வரும் பாப்போம்..யாரை சொல்லுறாங்கன்னு தெரியலையேன்னு காத்திருப்போம் என்றார். இரண்டு நிமிடம் கழித்து..அந்த செய்தி வந்தது.
வடநாட்டில் கொலை வழக்கில் கைதான ஒருவர் பிணையில் வந்துள்ளதாக செய்தி வாசிக்கப்பட்டது. பூங்கொடி உடனே..பாத்தியளா..நம்ம ஊரில் உள்ள ரவுடி..பிணையிலே வரல..வடநாட்டில் உள்ள ஒருவர் பிணையிலே வந்திருக்கார் போதுமா..என்று கேட்டார்.
அதை கேட்டதும்..ஏய்..அவர்..பிணையில் வரலை..பினாயிலிலே வந்திருக்காரு…நீ தப்பா சொல்லுறா..என்றார் கண்ணாயிரம்.
அவர் அப்படி சொன்னதும் பூங்கொடி கோபமாகி…ஏங்க பினாயிலு கிடையாது..பிணையில் என்றார்.
அதை கண்ணாயிரம் ஏற்றுக்கொள்ளவில்லை. நீ சொல்லுறதுதான் தப்பு.என் நண்பன் சொன்னான்..பினாயிலுதான்…என்று அடித்து சொன்னார். உடனே பூங்கொடி பாத்ரூமுக்கு சென்று பினாயில் பாட்டிலை எடுத்துவந்தார். ஏங்க.இதோ பாத்தீங்களா..இதுதான் பினாயில்….நான் சொல்லுறது பிணையில் ..இரண்டுக்கும் வித்தியாசம் தெரியுதா என்று கேட்டார்.
கண்ணாயிரத்துக்கு பதில் திருப்தியா இல்லை.எதுக்கும் விவரம் தெரிஞ்சவங்கிட்ட நாளைக்கு கேட்டுக்குவம் .என்றார். இந்த பதில் பூங்கொடிக்கு கோபத்தை ஏற்படுத்தியது.ஏங்க..நான் சொல்லுறதை கேட்க மாட்டியளா என்று திட்டினார். சரி,சரி எதுவும் இருந்துட்டு போகட்டும். இந்த வடநாட்டில் பினாயிலிலே வந்த ரவுடி. அங்கேதான்…லாந்துவானா..இல்ல வீட்டில் இருப்பானா என்று கேட்டார்.

அவர் எங்கேயும் இருந்துட்டு போறாரு..உங்களுக்கென்ன..பேசாம..காபியை குடிங்க..சுகர் கம்மியாகத்தான் போட்டிருக்கன்..குடிங்க என்று கண்ணாயிரத்திடம் பூங்கொடி கொடுத்தார்.அவர் வாங்கி குடித்துவிட்டு ஆ..கசக்குது…என்று முகத்தை சுளித்தார். ஏ.பூங்கொடி ஒருவாரம் கழித்துதானே சுகருக்குரிய கட்டுப்பாடுகள் கொண்டுவருவேன்னு சொன்ன..இப்போ.என்ன.இப்படி என்று கேட்டார். அதற்கு அவர் ஏங்க.ஒருவாரம் கழித்து காப்பியே கிடையாது. அது வரைக்கும் இதுவாவது கிடைக்குதேன்னு நினைச்சி குடிங்க என்றார். கண்ணாயிரம் கண்களை இறுக்க மூடிக்கொண்டு காப்பியை குடித்து முடித்தார்.
டிவி ஓடிக்கொண்டிருந்தது. அதில்..உன்னை சொல்லி குற்றமில்லை. என்னை சொல்லி குற்றமில்லை.காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி என்ற பாடல் ஒலித்தது.கண்ணாயிரம் சோகமாக கேட்டுக்கொண்டிருந்தார்.
அதை பார்த்த பூங்கொடி டிவியை ஆப் பண்ணினார். ஏங்க..அந்த அந்த இந்தி புக் வாங்கிட்டு வந்தேனே.அதை எடுத்து படிங்க..என்றார்.உடனே.கண்ணாயிரம் எழுந்து அலமாரியில் இருந்த இந்தி புக்கை எடுத்து புரட்டினார்.இருபது ரூபா புக்கு .இதிலே குறையாத்தான் போட்டிருப்பாங்க. எதுக்கும் பாப்போம் என்று படித்தார். லட்கா, லட்கி..மா..என்று படித்து கொண்டே போனார்.ஆமா இந்த கழுதைக்கு என்ன போட்டிருக்காங்க..பாப்போம்..என்ற கண்ணாயிரம் பக்கங்களை வேகமாக புரட்டினார். கழுதையை காணம்..பூங்கொடி..கழுதையை காணம் ,புக்கிலே கழுதையை காணம்…என்று சொன்னார். பூங்கொடி உடனே ஏங்க நல்லா தேடிப் பாருங்க.கழுதை இருக்கும் என்றார்.
புத்தகத்திலே கழுதையை கண்டுபிடிக்க முடியல..வடநாட்டுல போயி எப்படி கழுதையை கண்டுபிடிக்க முடியும் என்று மனசுக்குள் நினைத்து கொண்டார். பூங்கொடி.கழுதையை காணம் என்று சொன்னார்.
பூங்கொடிக்கு கோபம் வந்தது.என்னங்க..உங்களுக்கு கண்ணு வேற சரியா தெரியாது.கொடுங்க புத்தகத்தை நான் பாக்கிறேன் …என்று அந்த புத்தகத்தை வாங்கி முதலில் இருந்து படித்தார்.ம்..முதலாம் பக்கத்தில் இல்லை.இரண்டாம் பக்கம் பக்கத்திலே..அங்கேயும் இல்லை..எங்கே இருக்கும்..பக்கங்களை புரட்டிக்கொண்டே இருந்தார்.விலங்குகள் படம் போட்ட பக்கம் வந்தது.ம்..சிங்கம்
கரடி புலி யானை எல்லாத்துக்கும் இந்தியில் என்ன சொல்வாங்கன்னு போட்டிருந்தது. ஆனா கழுதைக்கு இந்தியில் என்னனுன்னு போடவில்லை. கடைசி பக்கத்தில் போட்டிருப்பாங்களோ என்று பார்த்தார். அங்கேயும் இல்லை.பூங்கொடி மெல்ல..ஏங்க..கழுதையை காணம்…என்றார்.
உடனே கண்ணாயிரம்…நீ இருபது ரூபாய்க்கு புக்கு வாங்கினா அதிலே கழுதையை எப்படி போடுவாங்க..நான் 95ரூபாய்க்கு வாங்கின இந்தி புக்கிலே…கழுதைக்கு என்ன பெயர் கழுதை குட்டிக்கு என்ன பெயர் என்று போட்டிருந்திருப்பாங்க..நீதான் அந்த புக்கு வேண்டாமுன்னுட்ட. இப்ப நான் கழுதைக்கு இந்தியிலே என்ன பெயருன்னு எப்படி கண்டு பிடிப்பேன் என்று கேட்டார். பூங்கொடி கோபத்தில் அது கிடக்கு கழுதைவிடுங்க..இந்தியிலேயும் கழுதைக்கு பேரு கழுதையின்னே இருக்கும் போல… என்றார்.
கண்ணாயிரம் அதை ஏற்கவில்லை.
கழுதைக்கு இந்தியிலே என்னன்னு தெரியாம நான் அதை எப்படி கூப்பிட முடியும் என்று கண்ணாயிரம் பரிதாபமாக கேட்டார். அதற்கு பூங்கொடி.ஏங்க கழுதை பெயரா முக்கியம்.. எல்லா ஊரிலேயும் கழுதை ஒண்ணு போலதான் கத்தும்.நீங்களும் கழுதை போல கத்துங்க..கழுதை ஓடிவந்துடும் என்றார். கண்ணாயிரம் சோர்வானார். அப்ப நான் கழுதை மாதிரி கத்துறதுக்கு பயிற்சி எடுக்கணுமா என்றார்.உடனே பூங்கொடி ஏங்க புலம்புறீங்க நாய் வேஷம் போட்டா குலைக்கதான் செய்யணும்.கழுதையை கண்டு பிடிக்கணுமுன்னா கத்திதான் ஆகணும் என்றார்.
கண்ணாயிரம்.. நம்ம ஊரு கழுதையை போய் பாக்கணுமா…அது எப்படி கத்துன்னு கேட்கணும்.பக்கத்திலே போனா உதைக்கும்..என்ன பண்ணுறது என்று யோசிக்க தொடங்கினார்.
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.