May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை நடுங்கவைத்த டீவி நியூஸ்./ நகைச்சுவை கதை

1 min read

The shocking news of Kananyiram / Story by Thabasukumar

28/1/2022
கண்ணாயிரம் கிழிந்து போன சேலையை கொடுத்துவிட்டு ரூபாயை வாங்குவதற்காக பிளாட்பார கடைக்காரரை தேடி பஸ்நிலையத்துக்கு சென்றார். அந்த வாலிபரோ..சேலை நல்லா இல்லை என்பது மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக கண்ணாயிரம் மாமூல் கேட்டு மிரட்டுகிறார் என்று சேலை வாங்க வந்த பெண்களிடம் சொல்லி அதிரவைத்தான்.
.கண்ணாயிரம் திகைத்து நின்றபோது..வியாபாரத்தை கெடுக்காதீங்க என்று சொல்லி..நூறு ரூபாயை கொடுத்து அனுப்பினான்.

கண்ணாயிரம்,என்னடா இது சேலையை கொடுத்துட்டு பணம் கேட்டா மாமூல் கேட்கிறான்னு சொல்லுறான்..நான் ரவுடியா,நானே ஒரு ரவுடிக்கு பயந்து போயி..என்ன செய்யலாமுன்னு அலையுறேன்..இவன் வேற நம்மள..ரவுடியாக்கிப்புட்டான்..சேலை வாங்கவந்த பெண்களுக்கு தெரிஞ்சு போச்சு..ஊரெல்லாம்.சொல்லிப்புடுவாங்கள..என்ன செய்யுறது..பூங்கொடிக்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட வேண்டியதுதான்.. என்று முணங்கியபடி கண்ணாயிரம் வீட்டுக்கு நடந்தார்.
சேலையை கொடுத்துட்டு பணம் வாங்க போனவரை இன்னும் காணமே..என்று கண்ணாயிரத்தை பூங்கொடி தேடிக்கொண்டிருந்தார்.அந்த நேரத்தில் கண்ணாயிரம் பேப்பரில் சுற்றிய சேலையுடன் வீட்டுக்குள் நுழைந்தார்.அவரை பார்த்து..என்னங்க..கிழிந்த சேலையை கொடுத்துட்டு வேற சேலை வாங்கிட்டு வரலையா..நீங்க எதையும் உருப்படியா செய்யமாட்டீங்க..என்று கத்தினார்.
கண்ணாயிரம்,ஏய்..பொறு..அவன்கிட்ட நூறு ரூபாயே வாங்கிட்டு வந்துட்டேன்..நான் விடுவேனா..என்று ரூபாயை காட்டினார்.
உடனே, பூங்கொடி..ஏங்க எழுபத்தி ஐந்து ரூபாய்தானே..நான் கொடுத்தேன்..நீங்க.நூறு ரூபாய் வாங்கிட்டு வந்திட்டிங்க..எப்படிங்க..என்று கேட்டார்.எல்லாம்…நம்ம சாமார்த்தியம்தான்..என்னடா ஏமாத்திரீயா..அப்படின்னு ஒரு மிரட்டு மிரட்டினேன்..அவ்வளவுதான் .பயந்துட்டான்..இன்னாங்க..சாரே. நூறு ரூபாய்பிடிங்கன்னு எங்கிட்ட கொடுத்திட்டு ஓடிட்டான்..என்றார்.
பூங்கொடிக்கு..நம்பவே முடியல..ஏங்க..உங்களுக்கு திடீரென்று எப்படிங்க வீரம் வந்துச்சு..என்று கேட்டார்.
அது.தானா வந்துச்சு…அது எப்பமும் வருமான்னு தெரியாது.. என்றார் கண்ணாயிரம். ஏங்க..அப்படி சொல்லுறீங்க..எப்பமும் வீரம் வராதா என்று பூங்கொடி அப்பாவியாக கேட்டார்.அதற்கு கண்ணாயிரம், வீரம் வரணுமுன்னா..சிலம்பாட்டம் தெரியணும்.கத்தி சண்டை கற்றுக்கணும்..கராத்தே படிக்கணும்..அதெல்லாம் நமக்கு முடியுமா என்று கேட்டார்.
உடனே பூங்கொடி..ஏங்க உங்களால முடியாதுங்கிறீங்க..கிழிஞ்ச சேலைக்குரிய ரூபாயையே வாங்கிட்டு வந்துட்டீங்க…பயப்படாதீங்க..நீங்களும் .சிலம்பாட்டம் கத்தி சண்டை கற்றுக்கோங்க..என்றார்.
கண்ணாயிரம்..ஏய்.அதுக்கு நிறைய செலவாகும்..பாலு முட்டையெல்லாம்.சாப்பிடணும்..கட்டுபடியாகாது என்றார்.பூங்கொடி..விடவில்லை.செலவை பத்தி கவலைப்படாதீங்க..நான் பாத்துக்கிறேன்..நீங்க பெரிய பயில்வான் ஆகணும் .ஊரே உங்களை பாத்து நடுங்கணும்..சரியா என்று கேட்டார்.
கண்ணாயிரம்…விழித்தார்.
என்ன மச்சான்..ஊ..சொல்லுறீயளா..இல்ல..ஊ…ஊ..சொல்லுறீயளா..என்று பூங்கொடி கேட்டார்.
கண்ணாயிரம்…நான் …ஓ..ஓ.சொல்லுறன் என்றார்.அதற்கு என்ன அர்த்தம்..என்று கேட்டார் பூங்கொடி.உடனே கண்ணாயிரம்..வேறு வழியில்லை.ஒத்துக்கிறேன்…என்றார்.
அட டா.வம்பா வாயை கொடுத்து மாட்டிக்கிட்டேனே..என்று நினைத்தார்.சமாளிப்போம் என்றது உள்மனது..கண்ணாயிரம் தான் வாங்கிவந்த நூறு ரூபாயை பூங்கொடியிடம் கொடுத்தார்.அவர் அதை வாங்கி கண்ணில் ஒற்றியபடி.இது முதல் வெற்றி..என்று சொல்லி.சாமி படத்துக்கு கீழேவைத்து கும்பிட்டார்.கண்ணாயிரம் அதை பாத்துக்கொண்டே இருந்தார்..இது எங்க போயி முடிய போகுதோ என்று நினைத்தவருக்கு லேசா பயம் ஏற்பட்டது. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்..கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்திபார்த்தார்..
அம்மாடி வலிக்குது..என்றபடி..சேரில் உட்கார்ந்தார்.பூங்கொடி பேனை போட்டுவிட்டார். காற்று வீசியது..இருங்க..காபி போட்டுட்டு வர்ரேன்..அது வரைக்கும்.இந்த டீவியை பாத்துக்கிட்டு இருங்க..என்று டீவியை போட்டுவிட்டார்..டீவியில் நீயூஸ் ஓடியது..கண்ணாயிரம் பார்த்துக்கொண்டிருந்தார்.பூங்கொடி..காபி போட்டுகொண்டுவந்து கொடுத்தார்.கண்ணாயிரம் காபி வாங்கி குடித்தார்..
அப்போது..டீவியில்.ஒருமுக்கிய குற்றவாளி பிணையில் வெளியே வந்தார் என்ற செய்தியை ஒருபெண்வாசித்தார். அதை கேட்டதும்..கண்ணாயிரம்..நடுங்கியபடி காபி டம்ளரை கீழே வைத்தார் .அய்யோ..அவன் பினாயிலிலே .வெளியே வந்துட்டான்..போச்சு .என்னை வெட்டிருவான் என்று கத்தினார்.அதை கேட்டு பூங்கொடி அதிர்ந்து போனார்.என்னங்க..பினாயிலு பினாயிலுன்னு கத்திரீங்க..என்று சத்தம் போட்டார்.
அவன் பினாயிலிலே வந்துட்டான்..என்னைவிடமாட்டான் என்று மீண்டும் சொன்னார் கண்ணாயிரம்.உடனே பூங்கொடி கோபத்தில்..யாருங்க அவரு..சொல்லுங்க என்று கேட்டார்.கண்ணாயிரம். பூங்காவில் கழுத்தில் மாலை போல் துண்டை போட்டிருந்ததையும். ..சிறுமி அந்த துண்டை பறித்து சென்றதையும்..சொன்னார் .உடனே பூங்கொடி. அதைதான் நான் பாத்தேனே..அதுக்கு இப்ப என்ன என்று கேட்டார்.
அதற்கு கண்ணாயிரம் ..அங்கேதான் பிரச்சினை ..அந்த சிறுமியின் அப்பா ஒரு ரவுடியாக்கும்.கழுத்திலே மாலைபோல துண்டு போட்டுட்டு போன ஒருத்தரின் கையை அரிவாளால வெட்டிட்டு ஜெயிலுக்கு போயிட்டாரு. அவரு பினாயிலிலே வெளியே வந்து என் கையையும் வெட்டுவாருன்னு என் நண்பன் சொன்னான்.அந்த ரவுடி பினாயிலிலே வந்துட்டான்..என் கையை வெட்டிருவான் ..டீவியிலே சொல்லிட்டாங்க..என்றார்.

பூங்கொடி உடனே..சாதாரண ரவுடிவெளியே விடுறதையெல்லாம் டீவியிலே சொல்லமாட்டாங்க..என்றார். கண்ணாயிரம் அதை ஏற்கவில்லை.பூங்கொடி..ம்..சரி..கோபப்படாதீங்க .மறுபடியும்..அதே செய்தி வரும்..இது நியூஸ் சேனல்தானே..பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.இருவரும்..அந்த செய்திக்காக காத்திருந்தார்கள்.

வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.