June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை கேலிசெய்த பெண்கள்/நகைச்சுவை கதை

1 min read

Kannayiram was mocked by women / Story by Thabasukumar

11.2.2022
கண்ணாயிரத்துக்கு மனவலிமை குறைவாக இருந்த தால் அவருக்கு சிலம்பாட்ட பயிற்சி கொடுக்க வேண்டும் என்று அவரது மனைவி பூங்கொடி நினைத்தார். அதற்காக காலையில் அவரை உடற்பயிற்சி கூடத்துக்கு அழைத்து செல்ல பூங்கொடி தயாரானார். கண்ணாயிரமும் வேட்டி சட்டை உடுத்தி ரெடியானார்.
முகத்தில்பவுடர் பூசி தன் அழகை கண்ணாடியில் பார்த்தவருக்கு அதிர்ச்சி. தன் முகத்தில் உள்ள சின்ன சின்ன கரும்புள்ளிகள் எல்லாம் பளிச்சென்று தெரிந்தது. மேலும் வயதானவர் போன்ற ஒரு தோற்றத்தையும் கண்ணாடி காட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணாயிரம் கண்ணாடி சரியில்லை என்ற முடிவுக்கு வந்தார். இதனால் அவர் இந்த கண்ணாடியை மாற்றிவிட்டு புது கண்ணாடிவாங்க வேண்டும் என்று மனைவி பூங்கொடியிடம் கோரிக்கை வைத்தார்.
அதற்கு அவர் ஏங்க அது புது கண்ணாடிதான். இரண்டு நாளைக்கு முன்னாலத்தான் வாங்கினேன் என்றார். உடனை கண்ணாயிரம் கோபத்துடன் நீ நல்ல கண்ணாடியை பார்த்து வாங்கல. என்ன நல்லாவே காட்டமாட்டேங்குது. போன வாரம் நான் கண்ணாடியிலே பாத்தேன். என்னை நல்லா காட்டிச்சே என்று சொன்னார். அதை கேட்டதும் ..அய்யோ அது பழைய கண்ணாடிங்க…அது நல்லா இல்லன்னு தூக்கி வேற இடத்திலே வச்சிட்டு இந்த புதுகண்ணாடியை வாங்கிவச்சிருக்கேன். என்னை அது நல்லாத்தானே காட்டுது என்றார் பூங்கொடி.
உடனே கண்ணாயிரம் உன்னை நல்லா காட்டுற கண்ணாடியை நீ வச்சிக்க..என்னை நல்லா காட்டுற பழைய கண்ணாடியை எனக்கு கொடு.நான் அதை வச்சு க்கிறேன் என்று சொன்னார். பூங்கொடி பழைய கண்ணாடி துல்லியமா காட்டாது என்று சொல்லிப் பார்த்தார். ஆனால் அவர் கேட்கவில்லை. துல்லியமா காட்டுதா காட்டவில்லையா என்பது பிரச்சினை இல்லை. நம்மை அழகா காட்டுதா இல்லையா என்பதுதான் பிரச்சினை. எனக்கு பழைய கண்ணாடியே போதும் என்றார். பூங்கொடி சரி நீங்க பிடிவாதமா இருக்கீங்க…பழைய கண்ணாடியிலே பாருங்க என்று அலமாரியில் இருந்த பழைய கண்ணாடியை எடுத்து கொடுத்தார். கண்ணாயிரம் அந்த கண்ணாடியை வாங்கி சின்ன வெள்ளை துணியை எடுத்து நன்றாக துடைத்தார். ஆ…இப்பம் எப்படி இருக்கு. புது கண்ணாடி மாதிரி பளிச்சென்று இருக்கு என்றவாறு அந்த பழையகண்ணாடியில் தன் முகத்தை பார்த்தார்.
அடடா..நம்ம முகம் எவ்வளவு அழகா இருக்கு.நம்ம கண்ணே பட்டுடும் போலிருக்குது என்று தன்னைத்தானை புகழ்ந்து கொண்டார். பூங்கொடி அதைபார்த்து தலையில் அடித்துகொண்டார்.ம்…அந்த பழைய கண்ணாடியையே வச்சிக்கிங்க…வாங்க சாப்பிடுங்க என்று கண்ணாயிரத்தை அழைத்தார். மூன்று இட்லியை எடுத்து தட்டில்வைத்தார். கொஞ்சம் சட்னியை ஊற்றினார்.கண்ணாயிரம் சாப்பிட்டார்.மேலும் மூன்று இட்லி கேட்டார். போதும்…உடற்பயிற்சி கூடத்துக்கு போயிட்டு வந்தவுடன் வயிறுபசிக்கும். அப்புறம் சாப்பிடுங்க.என்றார் பூங்கொடி.அப்படியா என்று கண்ணாயிரமும் ஏற்றுக்கொண்டார். பின்னர் பூங்கொடியும் இட்லி சாப்பிட்டு விட்டு உடற்பயிற்சி கூடத்துக்கு புறப்பட தயாரானார்.பவுடர் பூசிவிட்டு புதிய கண்ணாடியில் முகம் பார்த்தார்.கண்ணாயிரம் அதையே முறைத்து பார்த்து கொண்டிருந்தார். தன்னை அழகாக காட்டாத புதிய கண்ணாடி மீது அவருக்கு அவ்வளவு கோபம். பூங்கொடியை மட்டும் அந்த புது கண்ணாடி அழகாக காட்டுது..ம் அது பெண்கள் கண்ணாடி போலிருக்கு.அதான் பெண்களை நல்லா காட்டுது என்று கண்ணாயிரம் நினைத்து கொண்டார். பூங்கொடி மெல்ல கண்ணாயிரத்தை பார்த்து என்ன முகத்திலே இவ்வளவு பவுடர் அதிகமா அடிச்சிருக்கிய…துடையங்க என்றார்.ம்..
நான் பழைய கண்ணாடியில் பார்த்தேன் நல்லாத்தான் இருக்கு…பவுடர் அப்படியே இருக்கட்டும் என்றார் கண்ணாயிரம்.சரி உங்க இஷ்டம் என்றார் பூங்கொடி.
பின்னர் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு உடற்பயிற்சி கூடத்துக்கு புறப்பட்டார்கள். உடற்பயிற்சி கூடம் நடத்துபவர் பூங்கொடிக்கு உறவினர்.
அதனால் கண்ணாயிரத்தை அவரிடம் பூங்கொடி அழைத்து சென்றார்.

வழியில் கண்ணாயிரத்தை அவரது நண்பர் சந்தித்தார்.என்ன கண்ணாயிரம்….இப்படி இருக்க..வயசாகிட்டா…முகத்தை பார்க்க சகிக்கல…என்றார். கண்ணாயிரத்துக்கு கோபம் வந்தது. யோவ் என்னய்யா உளருற..கண்ணாடியிலே என்முகத்தை பார்த்தேன் நல்லாத்தானே இருந்தது. நீ ஏண்டா நக்கல் பண்ணுற..என்று கண்டித்தார்.உடனை அவர் நண்பர் ஏய்…வேஷக்காரன் வேஷம் போட்டமாதிரி இருக்கு…எழுபது வயது தாத்தா மாதிரி ஆயிட்ட ..உடம்ப நல்லா பாத்துக்க…என்றார். கண்ணாயிரத்துக்கு ஒன்றும் பிடிபடவில்லை.அடுத்து ஒரு முதியவர் வந்தார். கண்ணாயிரம்…என்ன முகத்தை கண்ணாடியில் பாத்தியா இல்லையா.இப்படியே போனால் நாய் துரத்தும்..முகத்தை கழிவிட்டு போ என்று சொல்லிவிட்டு சென்றார்.கண்ணாயிரத்துக்கு லேசா சந்தேகம் வந்தது.ம்..நம்ம கண்ணாடி பொய் சொல்லாது. இவனுவ நம்ம அழகை கண்டு…பொறாமை படுறானுவ…என்று நினைத்தார். அப்போது நான்கு பெண்கள் எதிரே வந்தார்கள். கண்ணாயிரத்தை பார்த்தவுடன் விழுந்து சிரித்தார்கள். கண்ணாயிரம் ஏதும் மாறுவேட போட்டியில் கலந்துக்க போறாரா…என்று கிண்டல் செய்துவிட்டு சென்றார்கள். அதை கேட்டதும் கண்ணாயிரத்துக்கு முகத்தில் ஏதோ கோளாறு இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார்.ஆனால் அதை வெளியே காட்டாமல் அவர் பூங்கொடி…நேரம் சரியில்லை. வீட்டுக்கு போயிட்டு அரை மணிநேரம் கழித்து போவோம் என்று சொன்னார். பூங்கொடி…ஆ..என்று கத்தினார்.

வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *