June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தேர்தல் தோல்வி பற்றி ராகுல், பிரியங்கா கருத்து

1 min read

Rahul, Priyanka comment on election defeat

10.3.2022

5 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை அடுத்து ராகுல், பிரியங்கா கருத்து தெரிவித்துள்ளனர்.

காங். பின்னடைவு

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்து உள்ளது.

இந்த நிலையில், மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்; எங்களது யுத்தம் தற்போது தான் தொடங்கியுள்ளது, தைரியம் மற்றும் புதிய ஆற்றலுடன் தொடர்ந்து பயணிப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ராகுல்காந்தி

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. பஞ்சாபில் ஆட்சியை இழந்துள்ளது.
இந்த நிலையில், 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் தற்போதைய முடிவுகள் குறித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி டுவிட்டரில் கூறுகையில், 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் மக்களின் தீர்ப்பை நாங்கள் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம். இந்த தேர்தலில் காங்கிரசுக்காக கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய தொண்டர்களுக்கு எனது நன்றி. இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்று மக்கள் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *