August 7, 2026

Seithi Saral

Tamil News Channel

தொகுதி மறுவரையறை பணி: எம்பிக்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு

1 min read

Constituency Delimitation Work: CM Vijay Calls for Meeting of MPs

6.8.2026
மத்திய அரசு மேற்கொள்ள உள்ள தொகுதி மறுவரையறைப்பணி குறித்து ஆலோசிக்க தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தொகுதிகளை மறுவரையறை செய்ய உத்தேசித்து அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தப்பணிகள் மற்றும் அதனால், தமிழகத்திற்கு ஏற்படும் தாக்கம் குறித்து தமிழகத்தை சேர்ந்த லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்பிக்களின் கலந்தாய்வு கூட்டம் வரும் 8 ம் தேதி ( சனிக்கிழமை ) பிற்பகல் 3 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டத்திற்கான அழைப்பிதழ் டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் வாயிலாக தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்பிக்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *