June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 72 பேருக்கு கொரோனா; உயிரிழப்பு இல்லை

1 min read

Corona for 72 people in Tamil Nadu today; No casualties

16/3/2022
தமிழகத்தில் இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றும் உயிரிழப்பு இல்லை

கொரோனா

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே தொற்று பாதிப்பு வேகமாக சரிந்து வருவது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

தமிழகத்தில் இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 52 ஆயிரத்து 145 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 161 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக இன்று உயிரிழப்பு பதிவாகவில்லை. தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 36 ஆயிரத்து 100 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று ( மார்ச் 15 ம் தேதி) 28ஆக இருந்த நிலையில் இன்று (மார்ச் 16ம் தேதி) 23 ஆக குறைந்துள்ளது.

தமிழகத்தில் 2-வது நாளாக கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *