June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் விலங்குகள் கருத்தடை அறுவை சிகிச்சை கண்காணிப்பு குழு கூட்டம்

1 min read

Meeting of the animal sterilization monitoring committee in Tenkasi

11.6.2026
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (1106.2026) கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் மாவட்ட விலங்குகள் வதை தடுப்பு சங்க கூட்டம் மற்றும் விலங்குகள் கருத்தடை அறுவை சிகிச்சை கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருரஞ்ஜீத்சிங் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அனைத்து உள்ளாட்சி பகுதிகளில் உள்ள சமூக நாய்களுக்கு (தெருநாய்கள்) கருத்தடை அறுவை சிசிச்சை பணி மேற்கொள்வது குறித்தும், தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்வது குறித்தும், இறைச்சிக் கூடங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி சுகாதாரமான இறைச்சி உற்பத்தியை மேற்கொள்வது குறித்தும், வள்ளலால் பல்லுயிர் காப்பகத்திட்டம் குறித்தும், உள்ளாட்சி அமைப்புகளில் கால்நடைகளால் (தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளால்) போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தடுப்பது குறித்தும். கால்நடை தொட்டிகளை பராமரித்தல் குறித்தும். நகராட்சியில் கட்டப்பட்டுள்ள இறைச்சிக்கூடங்களை புதுப்பித்து, தினந்தோறும் கால்நடை மருத்துவரை நியமனம், செய்து வதை செய்வதற்கு முன்னும் பின்னும் ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்தல் குறித்தும், சட்ட விரோதமாக வாகனங்களில் கால்நடைகளை ஏற்றிச் செல்வதை தடுத்தல் குறித்தும், உணவுப் பாதுகாப்புத்துறை யின் மூலம் இறைச்சி மற்றும் பால் விற்பனையை சோதனை செய்தல் குறித்தும், நாய்க்கடி மூலம் ஏற்படும் நோயினை தடுத்தல் குறித்தும், கால்நடை சந்தைகளை ஒழுங்குபடுத்துவது குறித்தும், செல்லப்பிராணிகள் விற்பனை செய்யும் மையத்தை பதிவு செய்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் கோயில்ராஜா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கிறிஸ்டோபர் தாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *