செங்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடைநீக்கம்
1 min read
Headmaster of Sengottai Government Girls’ Higher Secondary School suspended
11/6/2026
தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் செயல்பட்டு வரும் எஸ்.ஆர்.எம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2000-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் அடிப்படை வசதி குறைபாடு மற்றும் நிர்வாக குறைபாடு, மாணவிகள் மாற்றுச் சான்றிதழ் வாங்குவதற்கு பணம் வாங்கியது தொடர்பாக பள்ளி ஆசிரியர்களும் மாணவிகளும் பெற்றோரும் மாவட்ட கல்வி அதிகாரிக்கு அளித்த புகாரின் அடிப்படையில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் அடிப்படையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜீவாவை தற்காலிக பணியிடை நீக்கம் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும், பள்ளியில் நிலவி வரும் அடிப்படை பிரச்சினைகளை சரிசெய்து மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்