June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

திருவேங்கடம் சிவன்கோவிலில் சூலாயுதம் திருடிய வாலிபர்

1 min read

Young man who stole a trident from the Thiruvengadam Shiva temple

11.6.2026
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் பகுதியில் உள்ள சிவன் கோவிலில் சூலாயுதத்தை திருடிய வாலிபரை பொதுமக்கள் விரட்டியதால் சூலாயதத்தை சாலையில் போட்டு விட்டு தப்பி ஓடினார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் அக்ரஹாரம் தெருவில் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது .இந்த கோவிலில் கால பைரவர் சன்னதியில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட சூலாயுதம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவில் மது போதையில் அந்த கோவிலுக்குள் நுழைந்த ஒருவர் அங்கிருந்த ரூபாய் 15,000 மதிப்புள்ள ஐம்பொன்னால் செய்யப்பட்ட சூலாயுதத்தை திருடிக் கொண்டு இருளில் மறைந்து சென்று கொண்டிருந்தார். அதை தூரத்தில் இருந்து பார்த்த பொதுமக்கள் சத்தம் போட்டவுடன் அந்த வாலிபர் சூலாயுதத்தை தூக்கிக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

பொதுமக்களும் அவரை விரட்டி சென்றனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் சூலாயுதத்தை சாலையில் போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார் அந்த சூலாயுதம் மீட்கப்பட்டு கோவிலில் வைக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவேங்கடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து சூலாயுதம் திருடிய வாலிபரை வலை வீசி தேடி வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *