ஆலங்குளம்: வேனில் 1350 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்-ஒருவர் கைது
1 min read
Alangulam: 1,350 kg of ration rice smuggled in a van – one person arrested
8/8/2029
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கள்ளச் சந்தையில் விற்பனை செய்ய கடத்தி வந்த 1350 கிலோ ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தென்காசி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் ஆலங்குளம் முதல் பாவூர்சத்திரம் வரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காவலான்குறிச்சி புதுப்பட்டி மருதம்புதூர் பகுதிகளில் இருந்து அரசு பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசியை கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக வாகனத்தில் ஏற்றி வந்த ஆலங்குளம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 42) என்பவரை போலீசார் அத்தியூத்து சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி அருகில் வைத்து கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
மேலும் 1350 கிலோ ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
One attachment • Scanned by GmailAdd to Drive