பழைய குற்றாலம் மவுண்ட் ஹில்டன் பப்ளிக் பள்ளிமாணவிகள் தடகளபோட்டியில் சாதனை
1 min read
Old Courtallam Mount Hilton Public School Female students achieve success in athletics competition
8.8.2026
தென்காசி மாவட்டம் இடைகால் தனியார் பள்ளியில் நடைபெற்ற தடகளப் போட்டியில் பழைய குற்றாலம் மவுண்ட் ஹில்டன் பப்ளிக் பள்ளி மாணவிகள் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மதுரை சகோதயா சிபிஎஸ்இ பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் 17 வயதுக்கு கீழ் உள்ள மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் இடைகால் ஷ்டேக் ஹைடெக் பள்ளியில் நடைபெற்றது.
இதில் பழையகுற்றாலம் மவுண்ட் ஹில்டன் பப்ளிக் பள்ளியின் சார்பாகக் கலந்து கொண்டு விளையாடிய மாணவிகள் அணி 100 மீட்டர் ஓட்டம்: தங்கம் 1; நீளம் தாண்டுதல்: தங்கம் 1; 4×100 மீட்டர் தொடரோட்டம் வெள்ளி -4; 4×400 மீட்டர் தொடரோட்டம் வெண்கலம் போன்ற நான்கு பதக்கங்களையும் தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்று சாதனை படைத்தது.
அதனைத் தொடர்ந்து
பழைய குற்றாலம் மவுண்ட் ஹில்டன் பப்ளிக்
பள்ளியின் தாளாளர்
ஆர்.ஜே.வி பெல், பள்ளியின் செயலாளர் கிரேஸ் கஸ்தூரி பெல், பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.