தென்காசியில் 14-ந் தேதி தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்
1 min read
Private sector job fair in Tenkasi on the 14th.
8.8.2026
தென்காசியில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 14.08.2026 அன்று நடைபெறவுள்ளது. என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கதவு எண்.168, முகமதியா நகர் (எபினேசர் டைல்ஸ் அருகில், KFC பின்புறம், குத்துக்கல் வலசை, இலத்தூர் அஞ்சல் என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், ஆகஸ்ட் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 14.08.2026 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 0200 மணி வரை அலுவலக வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட பல்வேறு தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி, 12ம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ ஆகிய கல்வித்தகுதி உடைய தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த வேலைநாடுநர்கள் கலந்து கொள்ளலாம்.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tngov.in என்ற வலைதளத்தில் Candidate Loginஇல் தங்களது சுய விபரங்களை பதிவு செய்ய வேண்டும். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் www.inprivatejobs.tn.gov.in என்ற வலைதளத்தில் Employer Login இல் நிறுவனம் தொடர்பான விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு. 04633-213179 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் TENKASI EMPLOYMENT OFFICE என்ற Telegram Channel இல் இணைந்து வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் தென்காசி மாவட்ட ஆட்சியர் இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் இவ்வாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.