அஞ்சலங்களில் கங்கை புனித நீர் பாட்டில் விற்பனை
1 min read
Sale of holy Ganges water bottles at post offices
8.8.2026
தென்காசி, சங்கரன்கோவில் கோவில்பட்டி, உள்ளிட்ட தலைமை அஞ்சலகங்கள் மற்றும் துணை அஞ்சலகங்களிலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு கங்கை புனித நீர் அடங்கிய பாட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
இது பற்றி கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப் பாளர் செ.சுரேஷ்குமார் கூறியிருப்பதாவது :-
ஆடி அமாவாசையை முன்னிட்டு கங்கை புனித நீர் அடங்கிய பாட்டில், அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பாட்டிலின் விலை ரூ.30 ஆகும். கங்கை புனித நீர் அடங்கிய பாட்டில்களின் விற்பனை கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி ஆகிய தலைமை அஞ்சலங்கள் மற்றும் விளாத்திகுளம், எட்டையாபுரம், செங்கோட்டை, ஆலங்குளம், புளியங்குடி, கரிவலம்வந்தநல்லூர் ஆகிய துணை அஞ்சலகங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.
கங்கை தீர்த்த பாட்டில்களின் தேவைக்கு பொதுமக்கள் தங்கள் அருகிலுள்ள அஞ்சலகத்தை அணுகலாம் என்றும் மேலும் விபரங்களுக்கு 04632 221013 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது தேவையினை தெரிவிக்கலாம் என்றும் ,
தங்களது தேவையினை பூர்த்தி செய்யும் வண்ணம் தங்கள் ஊர் அஞ்சலகத்தில் கங்கை புனித நீர் அடங்கிய பாட்டில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்து தரப்படும் எனவும் அஞ்சல் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆடி அமாவாசையை முன்னிட்டு அஞ்சல் துறையில் இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப் பாளர் செ. சுரேஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.