June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 1,421 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 1,421 newcomers in India

27.3.2022
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1,421 பேராக குறைந்தது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டது. அதன்விவரதம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 1,421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 1,660-ஐ விட சற்று குறைவாகும்.

இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 19 ஆயிரத்து 453 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 16 ஆயிரத்து 187 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தாக்குதலுக்கு இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 149 பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் ஒரு நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,826 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 82 ஆயிரத்து 262 ஆக அதிகரித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *