அண்ணா பிறந்த நாளினையொட்டி மிதிவண்டி போட்டி
1 min read
Bicycle race to mark Anna’s birthday
11.11.2026
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தினை சிறப்புற கொண்டாடும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் மற்றும் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகின்றன. பொது மக்களிடையே உடற்தகுதி கலாச்சாரத்தினை புகுத்திடும் வண்ணம் அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் – 2026, வரும் 14.11.2026 அன்றும், அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிகள் – 2026 வரும் 15.11.2026 அன்றும், காலை 6.30 மணியளவில், விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் நடத்தப்படவுள்ளது.
மிதிவண்டி போட்டிகளில் பங்கேற்கும் மாணவ/மாணவியர்கள் இந்தியாவில் தயாரான சாதாரண மிதிவண்டிகளை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். மேலும், 2026-ஆம் ஆண்டிற்கான அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் 13 வயதுக்குட்பட்டவர்களில் மாணவர்களுக்கு 15 கி.மீ மற்றும் மாணவியர்களுக்கு 10 கி.மீ என்ற பிரிவிலும், 15 வயதுக்குட்பட்டவர்களில் மாணவர்களுக்கு 20 கி.மீ மற்றும் மாணவியர்களுக்கு 15 கி.மீ என்ற பிரிவிலும், 17 வயதுக்குட்பட்டவர்களில் மாணவர்களுக்கு 20 கி.மீ மற்றும் மாணவியர்களுக்கு 15 கி.மீ என்ற பிரிவிலும் நடத்தப்படவுள்ளன.
மிதிவண்டி போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்களைப் பெறுவோர்க்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் பின்வரும் விவரப்படி வழங்கப்படவுள்ளன. முதல் பரிசு பெறும் ஒரு நபருக்கு ரூ.5,000/, இரண்டாம் பரிசு பெறும் ஒரு நபருக்கு ரூ.3,000/-, மூன்றாம் பரிசு பெறும் ஒரு நபருக்கு ரூ.2,000/- மற்றும் 4 முதல் 10வது இடங்களில் வருபவர்களில் ஒரு நபருக்கு ரூ.250/- என பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
மேலும் 2026 ஆம்-ஆண்டிற்கான அண்ணா மாரத்தான் போட்டிகள் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட பிரிவில் ஆண்களுக்கு 8 கி.மீ. மற்றும் பெண்களுக்கு 5 கி.மீ. தூரமும், 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் பிரிவில் ஆண்களுக்கு 10 கி.மீ. மற்றும் பெண்களுக்கு 5 கி.மீ என இரண்டு பிரிவுகளில் நடைபெறவுள்ளது.
அதேபோல் மாரத்தான் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்களைப் பெறுவோருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் பின்வரும் விவரப்படி வழங்கப்படவுள்ளன. முதல் பரிசுத்தொகை ஒரு நபருக்கு ரூ.5000/- வீதம் மொத்தம் 4 நபர்கள் (2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள்) – ரூ.20000/-, இரண்டாம் பரிசுத்தொகையாக ஒரு நபருக்கு ரூ.3000/- வீதம் மொத்தம் 4 நபர்கள் (2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள்)- ரூ.12000/-, மூன்றாம் பரிசுத்தொகையாக ஒரு நபருக்கு ரூ.2000/- வீதம் மொத்தம் 4 நபர்கள் (2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள்)- ரூ.8000/-, 4 முதல் 10-வது இடங்களில் வருபவர்களுக்கான பரிசுத்தொகையாக ஒரு நபருக்கு ரூ.1000/- வீதம் மொத்தம் 28 நபர்களுக்கு (7 x 2 =14 ஆண்கள் மற்றும் 7 x 2 =14 பெண்கள்)- ரூ.28000/- என பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
மிதிவண்டி போட்டிகளில் பங்கேற்க தகுதியுள்ள பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது ஆதார் கார்டு மற்றும் வயதுச் சான்றிதழில் தலைமையாசிரியர் கையொப்பம் பெற்று 14.11.2026 அன்றும், மாரத்தான் போட்டிகளில் பங்கேற்பவர்கள் 15.11.2026 அன்றும் காலை 06.00 மணிக்கு, சமர்ப்பித்திடுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் தங்களது வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் கார்டு நகலினை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகையானது வங்கிப் பரிவர்த்தனை வழியாக அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
எனவே, மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா மிதிவண்டி மற்றும் மாரத்தான் போட்டிகள்-2026 ல் அதிக அளவிலான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறும், கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்கள் தங்களது பெயர்களை மாவட்ட விளையாட்டரங்கில் 13.11.2026 அன்று வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணிக்குள் பதிவு செய்திட வேண்டும். மேலும், தொடர்புக்கு 04562 225947 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விபரம் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.