June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

விவசாய தேவைகள் பற்றி வரைபடம் மூலம் மாணவிகள் விளக்கம்

1 min read

Students’ explanation through a map about agricultural needs

27.3.2022
கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்கு விவசாயம் தொடர்பான வளர்ச்சி மற்றும் தேவைகளை வேளாண் கல்லூரி மாணவிகள் வரை படம் மூலம் விளக்கினார்கள்.

மாணவிகள்

வேளாண் கல்லூரி மாணவ-மாணவிகள் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளை சந்தித்து விவசாயம் பற்றிய செயல்விளக்கம் செய்து காட்டுகிறார்கள். நிலத்திற்கு ஏற்ற பயிர், நோய் வந்தால் எப்படி பயிரை பாதுகாப்பது?, நிலத்தை வளமாக்குவது எப்படி என்பன போன்ற விளக்கங்களை செய்து காட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த, கோவை, வேளாண் ௧ல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் பா.சாருமதி, ஜெ.துர்காதேவி, ப.கீதாலட்சுமி ,ஜோதி யாகன்டி, கு.கீர்த்தனா பிரியா, ரா.மின்னுஷா, ரா.முத்துச்செல்வி, செ.நந்தினி , மா.பிரியதர்ஷினி, அ.சிநேகா மற்றும் ஷ.ஸ்ரீநிதி ஆகிய 11 பேர் கொண்ட குழு கிராமப்புற வேளாண் ௮னுபவப் பயிற்சியின் ஒ௫ பகுதியாக கோவை மாவட்டம், ௮ன்னூர் வட்டாரம், ஆம்போதி கிராமத்தில் முகாமிட்டு இருந்தனர்.
அங்கு அவர்கள் விவசாயம் தொடர்பான வளர்ச்சி, சிக்கல்கள், மற்றும் தேவைகளை வரைபடம் மூலம் கிராம விவசாயிகளுக்கு விளக்கினார்கள். சமூக வரைபடம், வள வரைபடம், சிக்கல் மரம், காலக்கோடு, பருவகால காலண்டர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இவற்றில் அவ்வூர் மக்களையே ஈடுபடுத்தி அக்கிராம அமைப்பு முறை மற்றும் தற்போதிய நிலையை வரைபடம் மூலமாக அவர்களே அறிந்து கொண்டு தங்கள் கிராமத்திற்கு மேலும் என்னென்ன வசதிகள் தேவை என்பதனையும் புரிந்து கொண்டனர்‌.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *