ஆயுதப்படை போலீசுக்கு ஆண்டுக்கு 100 நாள் ‘லீவ்’
1 min read
100 days leave per year for Armed Police
27.3.2022
மத்திய ஆயுதப் படை போலீசாருக்கு ஆண்டுக்கு, 100 நாட்கள் விடுமுறை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சி.ஏ.பி.எப்., எனப்படும் மத்திய ஆயுதப்படை போலீசார், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படை, சி.ஆர்.பி.எப்., மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் உள்ளிட்டோர் இவற்றில்
அடங்குவர். நாடு முழுதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர், மோசமான வானிலை நிலவும் இடங்களில் பணிபுரிகின்றனர்.
இந்தப் படையினர் ஆண்டுக்கு, 100 நாட்களை தங்கள் குடும்பத்தினருடன் செலவிட விடுமுறை வழங்க வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, உள்துறை அமைச்சகம் பல்வேறு ஆய்வுகளை நடத்தியது. இந்நிலையில், மத்திய ஆயுதப்படை போலீசாருக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் விடுமுறை அளிக்கும் திட்டம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக, உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.இவர்களுக்கு தற்போது 75 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது.