May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

கணிதம், வேதியியல் படிக்காதவர்களும் பொறியில் சேரலாம்: புதிய அறிவிப்பு வெளியீடு

1 min read

Those who have not studied Mathematics and Chemistry can also join the trap: New announcement release

30/3/2022
குறிப்பிட்ட பொறியியல் படிப்புகளில் சேர 12ஆம் வகுப்பில் கணிதம், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டியதில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்

2022-23 ஆம் கல்வியாண்டுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) வெளியிட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட சில பி.இ பொறியியல் படிப்புகளில் சேர கணிதம், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.
மேலும்,பெரும்பாலான பொறியியல் படிப்புகளுக்கு கணிதம் கட்டாயமல்ல எனவும், கணினி அறிவியல், மின் – மின்னணு பொறியியல் படிப்பில் சேர 12 ஆம் வகுப்பில் வேதியியல் படித்திருப்பது கட்டாயமல்ல எனவும் ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

குறிப்பாக கட்டிடக்கலை பயோடெக்னாலஜி மற்றும் பேஷன் டெக்னாலஜி, உணவு பதப்படுத்துதல், தோல் பதனிடுதல் உள்ளிட்ட மூன்றில் ஒரு பங்கு பொறியியல் படிப்புகளுக்கு 12 ஆம் வகுப்பில் கணிதம் படித்திருக்க வேண்டும் என்ற தேவையில்லை என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. இது மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.