கண்ணாயிரத்துக்கு வந்த சட்டை சிக்கல்/ நகைச்சுவை கதை
1 min read
“shirt” problem that came to Kannayiram / Story by Thabasumar
26/4/2022
கண்ணாயிரம் குரங்குகளிடமிருந்து நான்கு சட்டைகளையும் மீட்டுவந்தார். நாலாவது சட்டையை குரங்காய் பார்த்துபரிதாபப்பட்டு கண்ணாயிரத்திடம் கம்பில் வைத்து தூக்கிப்போட்டது. ஆனால் கண்ணாயிரம் அரிவாள் கம்பு கொண்டு மிரட்டி குரங்கிடம் நாலாவது சட்டையை மீட்டதாக மனைவியிடம் கதைவிட்டார். இந்த நேரத்தில் யாரோ கதவைதட்ட கண்ணாயிரம் மெல்ல நடந்துபோய் கதவை திறந்தார். அங்கு குரங்கு ஒன்று கோபத்துடன் நின்றுகொண்டிருந்தது. கண்ணாயிரம் குரங்கு தான் சொல்லியதை கேட்டு கோபத்தில் கடிக்க வந்திருக்கோ என்று நினைத்து கதவை பூட்டிவிட்டு வீட்டுக்குள் ஓடினார். மனைவி பூங்கொடியிடம்..ஏய் குரங்கு மீண்டும் வந்திருக்கு..அதுக்கு வாழைப்பழம் எதுவும் கொடுத்தா ஓடிவிடும்..வாழைப்பழம் இருக்கா என்று கேட்டார். பூங்கொடி அவரிடம்..வாழைப்பழம் இருக்கு…அதை நீங்க சாப்பிடக்கூடாது.. உங்களுக்கு சுகரு..குரங்கிடம் மட்டும் கொடுங்க என்றார். பூங்கொடியிடமிருந்து இரண்டு வாழைப்பழத்தை வாங்கிக்கொண்டு கண்ணாயிரம் மெல்ல கதவை திறந்தார். குரங்கு கையில் மற்றொரு சட்டையுடன் நின்று கொண்டிருந்தது. கண்ணாயிரத்தை பார்த்தவுடன் அந்த சட்டையை தூக்கி வீசியது. உடனே கண்ணாயிரம் இது என் சட்டை இல்ல…இது என் சட்டை இல்ல..வேற ஆள் சட்டை எனக்கு வேண்டாம் என்றார். குரங்கு அவரைபார்த்து சிரித்தது. கண்ணாயிரத்துக்கு மகிழ்ச்சி..அப்பாட..குரங்குக்கு நம்மமேல கோபம் இல்ல..அதை குறைச்சி வீட்டுக்குள்ள சொன்னதை வெளியே இருந்து அது ஒட்டுக்கேட்கலை போல..ஆமா குரங்குக்கு ஒட்டு கேட்க தெரியாதா..மனிசங்கதான் ஒட்டுக்கேட்டு சண்டையை இழுப்பாங்க போலிருக்கு என்று நினைத்தவர் வீட்டு படியைவிட்டு இறங்கி குரங்கிடம் வாழைப்பழங்களை நீட்டினார். அது ஆசையுடன் வாங்கிக்கொண்டு ஒருசிரிப்பு சிரித்தது. கண்ணாயிரத்துக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.அதையே உற்று நோக்கினார்.அப்போது குரங்கு வாழைப்பழங்களை தோலுரித்து சாப்பிட்டது. பின்னர் அந்த தொலிகளை கையில் எடுத்து சென்றது.ரோட்டில் வீசும் என்று எல்லோரும் எதிர்பார்த்தபோது அருகில் உள்ள குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு ஹாயாக நடந்து சென்றது.
அதைபார்த்த கண்ணாயிரம்..ஆ.குரங்குக்குக்கு எவ்வளவு அறிவுபாரு.. .பழத்தொலியை குப்பைத்தொட்டியில் எப்படிபோட்டுட்டு போறதுபாரு…அதுக்கு யார் சொல்லிக்கொடுத்திருப்பா .என்று அங்கு நின்றவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் ..குரங்குக்கு போய்யாராவது சொல்லிக்கொடுக்க முடியுமா. … அதுவாபாத்து தெரிஞ்சுக்குது…நாமதான் பாத்தும் தெரிஞ்சுக்கிறது இல்லை. ரோட்டில் குப்பையை கொட்டுகிறோம் என்று புலம்பினார்கள். அவர்களிடம் கண்ணாயிரம் நாமளும் சுத்தமா இருக்கணும். இல்லன்னா.. குரங்குவந்து அடிக்கும் என்றார். குரங்கு கொடுத்துவிட்டு சென்ற வேற ஒரு ஆள்சட்டையை என்ன செய்யலாமுன்னு கண்ணாயிரம் யோசித்தார். அந்த சட்டையினால்தான் நண்பரும் மற்றொருவரும் கட்டிப்புரண்டு சண்டைபோட்டார்கள். குரங்கிடம் அடிவாங்கியதால் அவர் ஓடிவிட்டார். அவரை எப்படிபார்த்து சட்டையை ஒப்படைப்பது. உன்னாலத்தான் நான் குரங்கிடம் அடிவாங்கினேன்னு அவர் நம்மள இரண்டு அப்பு அப்பிட்டா என்னசெய்வது..என்று யோசித்தார். வீட்டுவாசலில் கட்டி தொங்கவிடுவோம்..அவராவந்து கேட்டா கொடுப்போம் என்று கண்ணாயிரம் முடிவுசெய்தார். வீட்டின் ஓரத்தில் கட்டிதொங்கவிட்டார். இதை வீட்டுக்குள் கொண்டு போனாலும் பூங்கொடிவையும் என்று கண்ணாயிரம் நினைத்தார்.கதவை பூட்டிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்பப்பா…என்னபிரச்சினை…என்ன பிரச்சினை என்று மனைவியிடம் சொன்னார்.
என்னங்க..பிரச்சினை..எல்லாம் உங்களால்தான்வருது…காலையிலே இருந்து உங்களாலே ஒரே அக்கப்போரா இருக்கு..பேசாம இருங்கு. இருக்கிற பிரச்சினை காணாதுன்னு இப்ப குரங்கு பிரச்சினையா. .போதும்…போதும் என்று கோபப்பட்டார் .இன்னொரு சட்டைபிரச்சினையை சொன்னா..பூங்கொடி நம்மை மீண்டும் திட்டும் என்று நினைத்தார். அதை சொல்லாமல் அமைதியாக இருந்தார். ஐந்து நிமிடம் கழிந்திருக்கும் யோவ் கண்ணாயிரம் …யோவ் கண்ணாயிரம். என்று கத்தியபடி ஒருவர் கதவைதட்டினார். கண்ணாயிரம் கதவை திறந்துகொண்டு வெளியே வந்தார். கண்ணாயிரம் நண்பரோடு கட்டிப்புரண்டு சண்டைபோட்டவர் வியர்க்கவிறுவிறுக்க நின்றுகொண்டிருந்தார். என்ன கண்ணாயிரம் குரங்கு தூக்கிட்டுவந்து என்சட்டையை உங்கிட்ட கொ
டுத்துச்சாம…அதை எங்கே என்று கேட்டார் .கண்ணாயிரம் அதுவா..இங்கேதான் கட்டித்தொங்கவிட்டேன் என்று கூறியபடி அந்த இடத்தைபார்த்தார்.அங்கு கட்டித்தொங்கவிட்ட சட்டையைகாணவில்லை.ஆ…இங்கேதான..கட்டித்தொங்கவிட்டேன்…எங்கேபோச்சு. காணலையே..என்று கண்ணாயிரம் விழிபிதுங்கினார். சட்டைதேடிவந்தவர்…கோபத்துடன். .என்ன கண்ணாயிரம். ஐந்து நிமிஷத்திலே சட்டைவரல ..உன்னைகட்டித் தொங்கவிட்டுவிடுவேன் என்று மிரட்டினார். இந்த சட்டைசிக்கலால் கண்ணாயிரம். ஆ…. என்று அழத்தொடங்கினார்
.
-வே தபசுக்குமார்.புதுவை.