பொண்டாட்டிக்கு எதிர்ப்பதம் சொன்ன கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை
1 min read
Kannayiram said in opposition to wife / Story by Thabasukumar
6.5.2022
கண்ணாயிரம் தன்மனைவி பூங்கொடியுடன் குற்றாலம் செல்ல சுற்றுலா பஸ்சில் கடைசி சீட்டுக்கு நாலு சீட்டுக்கு பின்னால் அமர்ந்திருந்தார். அங்கிருந்து படம்பார்த்தால் நன்றாக தெரியும் என்று சொன்னதால் மகிழ்ச்சியாக இருந்தார். சீட்டு காலியாக கிடந்ததால்..படுத்துகொண்டே ஆடியபடி வந்தார். ஏங்க கீழே விழுந்துவிடுவீங்க என்று பூங்கொடி சத்தம் போட்டபோதும் அவர் கேட்கவில்லை. சீட்டு வெல்வட் மெத்தைபோல் இருந்ததால் படுத்து உருண்டார். பஸ் கன்னிய கோவில் அருகே சென்றபோது இறைச்சிகடைக்காரர் மோட்டார் சைக்கிளில்வந்து பஸ்சை வழிமறித்ததால் கண்ணாயிரம் அதிர்ச்சி அடைந்தார். இறைச்சிக்கடைக்காரருக்கு தெரியக்கூடாது என்பதற்காக பஸ்சில் பதுங்கி படுத்துகொண்டார்.
இறைச்சிக்கடைக்காரர் பஸ்சை மறித்ததால் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். உடனே இறைச்சிக்கடைக்காரர் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு ஒரு மினரல்வாட்டர் பாட்டில் மற்றும் பிரியாணி பொட்டலத்தை எடுத்துக்கொண்டு பஸ் அருகேவந்தார். கண்ணாடியை திறந்துகொண்டு சுடிதார் சுதா கையை நீட்ட இறைச்சிக்கடைக்காரர் பிரியாணி பொட்டலத்தையும் மினரல்வாட்ட ர் பாட்டிலையும் வாங்கிக்கொண்டார். இறைச்சிக்கடைக்காரர் ..இது சூப்பர் பிரியாணி..சாப்பிட நல்லா இருக்கும்.. ரொம்ப தூரம் அலைஞ்சு வாங்கிட்டுவந்தேன் என்று சுடிதார் சுதாவிடம் கதைவிட்டார். அவர்…சரி…சரி..நான் சாப்பிட்டுக்கொள்கிறேன்..போயிட்டுவாங்க..என்றார்.
இறைச்சிக்கடைக்காரர் …சீயு..டாடா..என்று சுடிதார் சுதாவிடம் கைஅசைத்தார். அவரும் பதிலுக்கு கை அசைக்க..இறைச்சிக்கடைக்காரர் மகிழ்ச்சியுடன்…கண்ணாயிரம் டிரைவர் சீட்டுக்கு பின்னால்தானே இருந்தார்..அவரை ஓருமிரட்டு மிரட்டிவிட்டு போவோமுன்னு பஸ்சின் முன்பக்கம் வந்து கீழே நின்றபடி..எட்டிப்பார்த்தார். கண்ணாயிரம் இருந்த சீட்டு காலியாக கிடந்தது. எங்க..ஆளை காணம் என்று எட்டிப்பார்த்தார். கண்ணாயிரம் பஸ்சீட்டில் படுத்து பதுங்கிகொண்டதால் தெரியவில்லை. எங்கே ..போயிருப்பார் என்றபடி டிரைவரிடம்.. இங்கே இருந்தகண்ணாயிரத்தை எங்கே என்று கேட்டார். டிரைவர் சிரித்தபடி..கடைசி சீட்டுக்கு நாலு சீட்டுக்கு தள்ளிப்பாருங்க இருப்பாரு என்று சொன்னார்.
இறைச்சிக்கடைக்காரர் உடனே பின்பக்கமாக வந்து பஸ்சுக்குள் எட்டிப்பார்த்தார். கண்ணாயிரம் சீட்டில் பதுங்கி இருப்பதை பார்த்துவிட்டார்.
ஏய் கண்ணாயிரம்..ஏய் கண்ணாயிரம் என்று கத்தினார்.கண்ணாயிரம் காது கேட்காததுபோல் இருந்தார். பூங்கொடி முறைத்துபார்த்தபடி எதுக்கு அவரை தேடுறீங்க…சொல்லுங்க..அவருக்கு தலைவலிக்குன்னுபடுத்திருக்காரு..டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்று கோபமாக சொன்னார்.
இறைச்சிக்கடைக்காரரும் கோபத்தில் நான் கண்ணாயிரத்திடம்தான் பேசவேண்டும்..உங்ககிட்ட பேசவேண்டிய அவசியம் இல்லை என்றார்.
அதை கேட்டதும் பூங்கொடி ஆத்திரத்தில்..அவசியம் இல்லையா..போய்யா என்று அதட்டினார். நிலைமை மோசமாவதை அறிந்த கண்ணாயிரம் திடுக்கிட்டு எழுந்தார்.
அமைதி…அமைதி…என்னசார் சொல்லுங்க..தலைவலியா இருக்குன்னு படுத்து கிடந்தேன். சொல்லவேண்டியதை சொல்லுங்க என்று சொன்னார்.
இறைச்சிக்கடைக்காரர் கோபத்தை குறைத்துக்கொண்டு.கண்ணாயிரம்…உங்க போனில ஜார்ஜ் இல்லையா…ஜவுளிக்கடைக்காரர் பேசினா சுவிட்ஆப் சுவிட்ஆப் என்று வருகிறதாம்..ஜார்ஜர் வைச்சிருக்கியளா…போனிலே ஜார்ஐ போட்டுட்டு ஜவுளிக்கடைக்காரருக்கிட்டே பேசு..அவருக்கு நீ இருபதாயிரம் கோடுக்கணுமாமே.. என்றார்.
கண்ணாயிரம் திடுக்கிட்டபடி பத்தாயிரம்தானே கொடுக்கணும்..எப்படி இருபதாயிரமுன்னு சொன்னாரு. ஏங்கிட்ட பத்தாயிரமுன்னுதானே சொன்னாரு…என்று பதட்டமானார்.
அதற்கு இறைச்சிக்கடைக்காரர்…அது எனக்கு தெரியாதுப்பா…நீ ஜவுளிகாகடைக்காரரிடம் உடனே பேசிக்க..என்று சொன்னார்.கண்ணாயிரமும் ஆளைவிட்டாபோதுமுன்னு நினைச்சு சரி…நான் பேசிக்கிறேன்..நீங்க போயிட்டுவாங்கன்னு சொன்னார்.
இறைச்சிக்கடைக்காரர் வந்தவேலை இனிதாக முடிந்ததால்…விசில் அடித்தபடி மோட்டார்சைக்கிளில் பறந்துசென்றார். பயில்வான் மெல்ல எழுந்து டிரைவரிடம் சென்று சரி..போகலாம் என்றார்.
பஸ் சிறிய குலுக்கலுடன் புறப்பட்டு சென்றது. பூங்கொடி மெல்ல..ஏங்க அந்த இறைச்சிக்கடைக்காரரை பார்த்து ஏன் பயப்புடுறீங்க…போய்யான்னு விரட்டிடவேண்டியதுதானே..என்றார்.
கண்ணாயிரம் வேகமாக…ஏய் கத்தாத…சும்மா பேசுனதுக்கே…ஜவுளிக்கடைக்காரரை தூண்டிவிட்டு போனில ஏசவச்சிட்டான்…இப்போ..நான் பத்தாயிரம் தரணுமுங்கிறதை மாத்தி இருபதாயிரம் தரணுமுங்கிறான்…அப்தான் நான் கோபத்திலே ஜவுளிக்கடைக்காரரிடம் போனில்பேசி சண்டைபோடுவேன்னு நினைக்கிறான்…நான்தான் பேசமாட்டேனே..என்று கண்ணாயிரம் உஷாராக சொன்னார்.
அவரது அறிவு கூர்மையைபார்த்து..ஆ..நீங்கள் எவ்வளவுபெரிய அறிவாளி அப்படின்னு பூங்கொடி பாராட்டினார்.
அதை கேட்டதும் கண்ணாயிரத்துக்கு வெட்கம்தாங்க முடியவில்லை.போ..புகழாதே..பிறகு எப்போ ஏசுவான்னு தெரியாதுன்னு பூங்கொடியை பார்த்து சொன்னார்.
பஸ்வேகமாக சென்றது..ஏங்க..அந்த பொண்ணுக்கு இறைச்சிக்கடைக்காரர் பிரியாணில்லாம்வாங்கி கொடுக்கிறாரு…நீங்க ஒருநாளைக்காவது பிரியாணிவாங்கி கொடுத்திருக்கியளா என்று கேட்டார்.
கண்ணாயிரம் மெல்ல….பூங்கொடி காதில்..பூங்கொடி..நீ தப்பா நினைச்சுட்ட…இறைச்சிக்கடைக்காரர் தன் மனைவிக்கு பிரியாணிவாங்கிகொடுக்கல..என்றார்.
அப்போ..அந்த பொண்ணுயாரு என்று கேட்டார்
கண்ணாயிரம் மெதுவா பூங்கொடிகாதில் பொண்டாட்டிமாதிரி என்றார்.
பூங்கொடி காதுகேட்காததுபோல்…சத்தமா..சொல்லுங்க…என்றார்.
கண்ணாயிரம் கொஞ்சம் சவுண்டாக…பொண்டாட்டிமாதிரி என்றுசொல்ல பூங்கொடி சவுண்டாக…என்ன பொண்டாட்டிமாதிரியா என்று கத்தினார்.
அந்த சத்தத்தை கேட்டு சுடிதார் சுதா..கண்ணாயிரத்தை திரும்பிபார்த்தார். அதை கண்டதும் கண்ணாயிரத்துக்கு வியர்த்தது…சுடிதார்சுதா இறைச்சிக்கடைக்காரரிடம் போட்டுக்கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக…ஒண்ணும் இல்லம்மா….பொண்டாடாடிக்கு எதிர்ப்பதம் என்னன்னு கேட்டா…நான் பொண்டாட்டிமாதிரின்னு சொன்னேன்..அவ்வளவுதான்..நீங்க..ஒண்ணும் நினைக்காதுங்க என்றார்
.பூங்கொடி எழுந்து..பொண்டாட்டிக்கு எதிர்ப்பதம் வைப்பாட்டின்னு நான் சொல்லுறன்..அது சரியா தப்பா என்று சுடிதார் சுதாவைபார்த்து பூங்கொடி சொல்ல…அவள் முறைத்தாள். அதைபார்த்ததும் கண்ணாயிரம் போச்சு…போச்சு…இறைச்சிக்கடைக்காரர் என்னைத்தான் அடிப்பார்…பூங்கொடி அமைதியாக…இரு இறைச்சிகடைக்காரன் மீண்டும் மோட்டார் சைக்கிளில்வந்துவழிமறிப்பான்..நீ சத்தம் போடாதே என்று வாயை பொத்தினார். உனக்கு இன்னைக்கு பிரியாணிவாங்கி கொடுக்கிறேன்…அமைதியாக இரு..என்றார்.
பூங்கொடி…மெதுவாக…சரி..சரி..என்று சொன்னார். அப்போது பயில்வான் முன்பகுதியிலிருந்து கண்ணாயிரத்தை நோக்கி வந்தார். கண்ணாயிரம் மறுபடியும் என்ன சத்தம் என்று கேட்டார்.
அதற்கு அவர் ஒண்ணுமில்ல பொண்டாட்டிக்கு எதிர்ப்பதம் பொண்டாட்டிமாதிரின்னு சொன்னேன்.பூங்கொடி அதை கேட்காம..வைப்பாட்டின்னு சொல்லுறா…அது சரியா என்று கேட்டார்.
அதற்கு பயில்வான்..ஒவ்வொருத்தரும் ஓவ்வொருமாதிரி சொல்வாங்க..பஸ்டிரைவருக்கிட்ட கேட்டா ஸ்டெப்பினி என்பார். கொத்தனாருக்கிட்ட கேட்டா…சின்ன வீடு என்பார்…என்று சொன்னார்.
கண்ணாயிரத்துக்கு பதில் திருப்தியாக இல்ல..என்ன கண்ணாயிரம் இது சரியில்லையா…படிச்சவங்ககிட்ட கேட்டா சரியா சொல்வாங்க..ஏன் நம்ம சுடிதார் சுதாக்கிட்டே கேட்போமே..என்றார் பயில்வான். அதை பார்த்து கண்ணாயிரம் வேண்டாம்..வேண்டாம் என்று அலற பயில்வானோ..பயப்படாதீங்க..நான் கேட்கிறமாதிரி கேட்கிறன் என்றார்.
கண்ணாயிரம் பயந்துபோய்சீட்டுக்கு அடியில் பதுங்கினார். பயில்வானோ தைரியமாக சுடிதார் சுதாவைபார்த்து…மேடம் ஒரு சின்ன சந்தேகம்..மனைவிக்கு எதிர்பதம் என்ன என்று கேட்டார். அதற்கு சுடிதார் சுதா புன்னகையுடன்…ரொம்ப சிம்பிள்…மனைவி டைம்வேஸ்டு…சின்ன மனைவி டைம்பாசு என்றாள்.
அதை கேட்டு மற்றவர்கள் கைதட்டினார்கள்.கண்ணாயிரம் மெல்ல எட்டிப்பார்த்தார். சுடிதார் சுதா அவரைபார்த்து ஆள் காட்டிவிரலைகாட்டி உதட்டை கடித்தாள்.
இதைபார்த்த பூங்கொடி..ஏங்க உங்களைபார்த்து உதட்டை கடிக்கிறாள்..என்ன நடக்கு இங்கே என்று அலறினாள்.
கண்ணாயிரம் உடனே..ஏய் நீ நினைக்கிற மாதிரி ஒண்ணும் கிடையாது..என்னை மிரட்டுறதுக்காக உதட்டை கடிக்கிறாள்..என்னை நம்பு என்று கெஞ்சினார். பூங்கொடியோ..உங்கள நம்புறன்…அவளை நம்பமுடியாது..நீங்க கீழே படுங்க..எழும்ப கூடாது என்றார்.
கண்ணாயிரம் கண்ணை மூடி படுத்துக்கொண்டார்.
-வே.தபசுக்குமார்.புதுவை.