June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

குப்பைகளை அகற்ற சொந்த நிதியில் டிராக்டர் வாங்கிய கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர்

1 min read

Kila Kadayam panchayat president who bought a tractor with own funds to remove garbage

9.6.2022
குப்பைகளை அகற்ற கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் தனது சொந்த நிதியில் டிராக்டர் வாங்கி கொடுத்துள்ளார்.

கீழக்கடையம்

தென்காசி மாவட்டம் கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் பூமிநாத். இவர் பஞ்சாயத்து தலைவராக பொறுப்பு ஏற்ற நாளில் இருந்து பம்பரமாக செயல்பட்டு வருகிறார். செட்டிமரத்தில் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றி வேறு இடத்திற்கு மாற்றினார். மேலும் அந்த இடத்தை தனியார் ஆக்கிரமிக்காத வகையில் வேலிஅமைத்து மரக்கன்றுகளை நட்டுள்ளார். இதனால் அதன் அருகே ஓடும் ஜம்பு நதியில் குப்பைகள் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுடுகாடு இருக்கும் இடத்திலும் கருவைகளை அகற்றி மரங்களை வைத்துள்ளார். குடிநீர் கிணறு இருக்கும் வளாகத்தில் பலாமரக்கன்றுகளை நட்டுள்ளார்.
மேலும் தினமும் குப்பைகள் அளளப்படுகிறதா என்று வீதிதோறும் சென்று கீழக்கடையம் மட்டுமின்றி புலவனூர் மாதாபுரம், கல்யாணிபுரம், பொன்மலை நகர் உள்ளிட்ட பல்வேறு சிறு கிராமங்களை உள்ளடக்கியது
இங்கு போதுமான அளவு குப்பை அள்ளி செல்லும் வாகனம் இல்லாததால் துப்புரவு பணியாளர்கள் தள்ளுவண்டியில் சுமந்து சென்று மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

டிராக்டர்
இதனால் குப்பைகளை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது
உடனடி தீர்வாக கீழக்கடயம் பஞ்சாயத் தலைவர் பூமிநாத் உடைய சொந்த நிதியிலிருந்து டிராக்டர் ஒன்றை வாங்கி பஞ்சாயத்துக்கு அளித்துள்ளார்

இதுபோன்று சொந்த நிதியில் டிராக்டர் வாங்கிய கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத்திற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்
இதுபோன்று சொந்த நிதியில் டிராக்டர் வாங்கி எல்லா பஞ்சாயத்துத் தலைவர்களும் குப்பைகளை அகற்ற முயற்சி செய்தால் தூய்மையான இந்தியாவாக மாறும் என்பதில் சிறிதும் மாற்றம் இல்லை எனவும் தமிழக அரசு இதுபோன்ற பஞ்சாயத்து தலைவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *