June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

திருட முயற்சியின் போது ஏ.டி.எம் எந்திரம் தீப்பிடித்து- ரூ3.8 லட்சம் பணம் சேதம்

1 min read

ATM machine caught fire during robbery attempt – Rs 3.8 lakh cash damage

15.6..2022
எந்திரத்தை கியாஸ் கட்டர் மூலம் உடைக்கும் முயற்சியில் மர்ம மனிதர்கள் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஏ.டி.எம் எந்திரம் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் ரூ3.8 லட்சம் பணம் சேதம் அடைந்தது.

ஏ.டி.எம். மையம்

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள கூட்லவாடி என்ற இடத்தில் ஏ.டி.எம் மையம் உள்ளது. சம்பவத்தன்று இரவு இந்த மையத்துக்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம மனிதர்கள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவை கருப்பு பெயிண்ட் அடித்து மறைத்தனர். பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் கட்டர் மூலம் உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென ஏ.டி.எம் எந்திரம் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதில் எந்திரத்தில் இருந்த 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எரிந்து சேதமானது. இதனால் பயந்து போன மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுபற்றி அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *