நிதி நெருக்கடி காரணமாக சீனாவிடமிருந்து பாகிஸ்தான் 2.3 பில்லியன் டாலர் கடன் வாங்கியது
1 min read
Pakistan borrowed $ 2.3 billion from China due to the financial crisis
23.6.2022
நிதி நெருக்கடி காரணமாக பாகிஸ்தான் சீனாவிடமிருந்து 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வாங்கியுள்ளது.
நிதிநெருக்கடி
பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. குறைந்து வரும் அன்னிய செலாவணி கையிருப்பு, அதிகரித்து வரும் திருப்பி செலுத்த வேண்டிய கடன், டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற பல சிக்கல்களை அந்த நாடு எதிர் கொண்டு வருகிறது.
இந்நிலையில், கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் சீனாவிடமிருந்து 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வாங்கியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் நிதிமந்திரி இஸ்மாயில் தனது டுவிட்டர் பதிவில், “சீன வங்கிகள் கூட்டமைப்பு நேற்று பாகிஸ்தானுக்கு 2.3 பில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புக்கொண்டு கடன்பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளது . இன்னும் இரண்டு நாட்களில் இந்தப் பணம் பாகிஸ்தான் வந்து சேரும். இதற்காக சீன அரசுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.