May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 17,366 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 17,366 newcomers in India

24.6.2022
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு நாளில் புதிதாக 17,366 பேருக்கு தொற்று கணடறியப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த புதன்கிழமை (22-ந் தேதி) 12 ஆயிரத்து 249 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. வியாழக்கிழமை இந்த எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்துள்ளது. வியாழக்கிழமை 13 ஆயிரத்து 313 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று ஒருநள் பாதிப்பு 17,366- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 88,284 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இன்று காலை வரை ஒரு நாளில் 13 ஆயிரத்து 029 பேர் குணம் அடைந்துள்ளனர். ஒரு நாளில் கொரோனா தொற்றால் 13 பேர் உயிரிழந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.