June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

திருப்பதி கோவிலில் ஒரே நாளில் ரூ.4.34 லட்சம் கோடி உண்டியல் வசூல்

1 min read

Tirupati temple collects Rs.4.34 Lakh Crore bills in a single day

3.6.2022
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.

திருப்பதி பக்தர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். வார விடுமுறை நாள் என்பதால் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். அதேபோன்று வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கையும் செலுத்தி வருகிறார்கள்.
இலவச தரிசனத்திற்காக 15 மணி நேரமும், சிறப்பு தரிசனத்திற்காக 5 மணி நேரமும் பக்தர்கள் காத்திருந்தனர்.நேற்று ஒரே நாளில் மட்டும் 88 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்தனர்.
உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியே 34 லட்சம் கிடைக்கப்பெற்றது.
இவ்வாறு தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *