May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

பெண்ணின் கைக்குலுக்கலுக்கு பயந்த கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Kannayiram scared of the woman’s handshake/ comedy story/ Tabasukumar

26.7.2022
கண்ணாயிரம் குற்றாலம் செல்ல மனைவி பூங்கொடியுடன் சுற்றுலா பஸ்சில் சென்றபோது பஸ் நெய்வேலி வந்து சேர்ந்த நிலையில் நெய்வேலிக்கு அந்த பெயர் ஏன்வந்தது என்ற சந்தேகம் வந்தது. இதற்காக கண்ணாயிரம் போட்டிவைத்தபோது சுடிதார் சுதா நெய் அதிகமாக இருந்ததால் நெய்வேலின்னு பெயர்வந்தது என்று அதற்கு ஆதாரமாக செல்போனில் கூகுளில் உள்ளதை காட்ட கண்ணாயிரமோ ..நீங்க சொந்தமா சொல்லாம கூகுளைபார்த்து சொன்னதால பரிசு கிடையாது என்று அடம்பிடித்தார்.
இந்த நேரத்தில் சுடிதார்சுதாவுக்காக வாலிபர்கள் போர்கொடி தூக்க கண்ணாயிரம் தன்மனைவி பூங்கொடி கோபப்படுவார் என்பதற்காக சுடிதார்சுதாவுக்கு பரிசு கொடுக்க தயங்கி பயில்வான்பக்கம்போய் அமர்ந்து கொண்டார். அப்போது கண்ணாயிரத்தை நோக்கி பறந்துவந்த ஒரு செருப்பு அவரது தலையை உரசி கொண்டு கீழேவிழுந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த கண்ணாயிரம்…என்ன இது பஸ்சா…இல்ல வேறு எந்த இடமா..என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு…பேச்சு பேச்சா இருக்கணும்.இப்படி செருப்பை தூக்கி வீசுறது எப்படி நியாயம்? படாத இடத்திலே பட்டா யார் பதில் சொல்லுறது…ஒரு நியாயம் வேண்டாம்..வாலிபர்களே..உங்கள் நியாயத்தை சொல்லுங்க…அதுக்காக இப்படியா செருப்பை வீசுறது என்று ஆவேசமாக பேசினார்.
உடனே கூட்டத்தில் ஒருவாலிபர் குரல் கேட்டது…யோவ் நாங்க செருப்பை வீசல…அது யார் செருப்புன்னு எடுத்துபார்த்துட்டு சொல்லுவே என்றுசொல்ல…கண்ணாயிரம் கோபத்தில் யார்ரா அது..கூட்டத்தில் மறைஞ்சிக்கிட்டு பேசுறது..செருப்பை எடுத்துட்டு உங்கிட்டபேசிக்கிறன் என்றவாறு சீட்டுக்கு அடியில் பதுங்கி கிடந்த செருப்பை குனிந்து கஷ்டப்பட்டு வெளியே எடுத்தார்.அது லேடீஸ் ஹைஹீல்ஸ் செருப்பு…அடி ஆத்தாடி.லேடிசா இது வாலிபர்கள் வீசலையா…லேடிதான் வீசிச்சா…ஹைஹீல்ஸ் செருப்பு …தலையிலே பட்டிருந்தா ரத்தம் கொட்டிருக்கும்..யாருங்க…இதை வீசினது…நான் வேற வாலிபர்களை ஏசிப்புட்டேன்..
இதை வீசின லேடியாரு..சொல்லுங்க..இந்த வெள்ளை நிற ஹைஹீல்ஸ் செருப்பை வீசினது யாரு..சொல்லுங்க…சொல்லுங்க…என்று ஹைஹீல்ஸ் செருப்பை தூக்கிக்காட்டினார். எல்லோரும் அந்த ஒற்றை செருப்பை உற்றுப்பார்த்தார்கள். ஆனால் பெண்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் வராத நிலையில் கண்ணாயிரத்துக்கு சுடிதார் சுதாபோட்டுவந்த ஹைஹீல்ஸ் நினைவுக்குவர…பரிசு கிடைக்காத கோபத்தில் சுடிதார்சுதாதான் வீசி இருக்குமோ என்று நினைத்தவர்…மெல்ல அவரைப்பார்த்தார்.
பரிசு கிடைக்கல என்று இப்படி ஒற்றை செருப்பை வீசலாமா..ஓருவேளை பஸ்சைவிட்டு கீழே விழுந்திருந்தா என்ன பண்ணுவீங்க…ஒரு செருப்பை போட்டு நடக்க முடியுமா என்று கேட்க…சுடிதார் சுதா கோபத்தில் தனது காலில் கிடந்த மஞ்சள் நிற ஹைஹீல்ஸ் செருப்பை எடுத்து கண்ணாயிரத்தை நோக்கி அடிப்பதுபோல் காட்டினார். அப்போது பூங்கொடி எழுந்து ஏய் என் புருசனை பார்த்து செருப்பை காட்டுறீயா…உன்னை என்ன செய்யுறன் பாரு என்று சுடிதார் சுதா மீது பாய கண்ணாயிரம் பாய்ந்து தடுக்க.. பூங்கொடியும் சுடிதார் சுதாவும் ஆவேசமாக ஒருவரைஒருவர் ஏச…கண்ணாயிரம் சமாளிக்கமுடியாமல் திணற…பயில்வான் எழுந்து இருவரையும் சமாதானம் செய்தார்.
சுடிதார்சுதாவிடம்…நீ. ..ஹைஹீல்ஸ் செருப்பை எடுத்து கண்ணாயிரத்திடம் காட்டியது தப்புதான்..என்று குற்றம்சாட்ட சுடிதார்சுதா ஆவேசத்துடன்..நான் அவரை அடிக்கிறதுக்காக செருப்பை காட்டல..அவர்மேல சந்தேகப்பட்டார். அவர்மீது வீசினது என்செருப்பு இல்ல என்று காட்டுவதற்காக என் செருப்பை காட்டினேன் என்று சொன்னார்.
கண்ணாயிரம் நம்ப மறுத்து…இதை ஏற்றுக்கிடமுடியாது…மற்றொரு செருப்பை எங்கே என்று கேட்க…சுடிதார்சுதா வேகமாக தனது மற்றொரு செருப்பையும் எடுத்துக்காட்ட..ஆமா..சுடிதார் சுதாவிடம் இரண்டு செருப்பும் இருக்கு…அப்போ நம்ம மேலவந்து விழுந்த செருப்பு யாருடையது என்று குழம்பினார்.
சுடிதார்சுதா .கண்ணாயிரத்திடம்என் செருப்பு மஞ்சள்..நீவச்சிருக்கிற செருப்பு வெள்ளை…அதை யார்வீசினது யாருன்னு கேளுங்க..வெண்ணை…என்று கூறிவிட்டு அமர்ந்தாள்.
அப்போதுதான் கண்ணாயிரம் ஆமா..நான் இந்த செருப்பு நிறத்தைபார்க்காம போயிட்டேனே…ஆமா…என்று தன்னைத்தானே நொந்து கொண்டார்.தொடர்ந்து இந்த வெள்ளை செருப்பை வீசினவங்கள சும்மாவிடக்கூடாது…வெள்ளை ஹைஹீல்ஸ் செருப்பை போட்டிட்டுவந்தவங்க யாரு..உண்மையை சொல்லுங்க…ஒத்தை செருப்பு…ஒத்தை செருப்பு என்று உரத்த குரலில் சொல்ல எல்லா பெண்களும் தாங்கள்போட்டுவந்த செருப்பு இருக்கா என்று செக்பண்ணிக்கொண்டார்கள்.
ஒருகல்லூரி மாணவி தான்காலுக்கு அடியில் கழற்றிவைத்த வெள்ளை நிற ஹைஹீல்ஸ்செருப்பு இருக்கா என்று பார்த்தபோது ஒரு செருப்பு இருக்க…மற்றோரு செருப்பை காணாமல் திடுக்கிட்டார்..ஆ..எங்கே போச்சு…என்று பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்க…அவர்கள் கண்ணாயிரம் கையிலே வச்சிருக்காரே…அதான்னுபாரு என்று சொல்ல அதைபார்த்த மாணவிக்கு தலைசுற்றியது.ஆ..அதுதான்..என்னுடைய வெள்ளை செருப்பு..அது எப்படி அங்கேபோச்சு என்று அருகில் உள்ளவர்களிடம் கேட்க…ஏய்..இந்த உலகத்திலேதான் இருக்கியா இல்ல..வேறு உலகத்திலே இருக்கியா…இங்கே நடக்கிறது எதுவும் உனக்கு தெரியாதா..என்ன பொண்ணு நீ என்று ஏச..அந்த மாணவி.. நான் கால்வலிக்குன்னு செருப்பை கழற்றிபோட்டுட்டுகொஞ்சம் இயற்கை காட்சிகளை ரசித்தபடிவந்தேன்..அதுக்குள்ளே காணாம போச்சு..என்று சொன்னார்.அதற்கு அவர்கள்..அது காணாமல் போகல…நீதான் கண்ணாயிரம் மேல அந்த செருப்பை எடுத்து வீசியிருக்க என்று குற்றம்சாட்ட அந்த மாணவி…ஆ..அது நானில்ல…நானில்ல..வேற யாரோ வீசியிருக்காங்க என்று அழ ஆரம்பித்தார்.
அதற்கு அவர்கள் ஏய் அழாத கண்ணாயிரத்திடம் உண்மையை சொல்லி செருப்பை வாங்கிக்க..பிறகு அவர் அந்த செருப்பையும் ஏலம்விட்டுறுவாரு..போ…போ..என்று அவசரப்படுத்தினர்.
அந்த மாணவி மெல்ல எழ முயன்றபோது..கண்ணாயிரம் ..யார்..இந்த செருப்ப வீசினது…ஐந்து நிமிஷமாச்சு..இன்னும் பதில்வரல..உண்மையை சொல்லுங்க…ஒற்றை செருப்புவச்சிருக்கவங்கள…நான் ஈசியா கண்டுபிடிச்சிடுவேன்…சொல்லுங்க…என்று சுற்றிவந்தார். நீங்களா சொல்லிட்டா..நான் மன்னிச்சிடுவேன்…நானா கண்டுபிடிச்சிட்டா..விடமாட்டேன்..அவங்க மேலயே இந்த செருப்பை வீசுவேன் என்று எச்சரிக்க…மாணவி பயந்துபோய் ஒற்றை செருப்புடன் எழுந்து நின்றார்…இது என் வெள்ளை செருப்பு…மற்றொரு செருப்பு…அங்கே இருக்கு…அதை நான் வீசல…யாரோ என் செருப்பை எடுத்து வீசியிருக்காங்க…எனக்கு என் செருப்பு வேணும் என்று அழுவதுபோல் சொல்ல கண்ணாயிரம் ..ம்மா..அழாதே…நீ காலிலே செருப்பை போட்டிருந்தா…அது எப்படி பறந்தாவரும் என்று கேட்டார். உடனே அந்த மாணவி நான் செருப்பை கழற்றிபோட்டிருந்தேன்..அந்த நேரத்தில யாரோ…காலால அந்த செருப்பை நகர்த்தி எடுத்து வீசியிருக்காங்க…என்று சொல்ல..கண்ணாயிரம்…அப்படியா விசயம்..எல்லாம் உன்பின்னால இருக்கிறவாலிமர்களாத்தான் இருக்கும்..நீ உஷாரா இரும்மா என்று சொல்லியவர்..நீ அழாதே..செருப்பை வாங்கிக்க ஏன்று சொன்னார்.
உடனே அந்த மாணவி…ஒரு செருப்பை கீழே போட்டுவிட்டு எழுந்துவந்து கண்ணாயிரத்திடம் வந்து செருப்பை வாங்கிச்சென்றார். திரும்பிவந்து பார்த்தபோது அவர் கீழேபோட்டு சென்ற மற்றொரு செருப்பை காணவில்லை…சார்..என் செருப்பை காணம்…என் செருப்பை காணம் என்று கத்த..கண்ணாயிரம்..என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு என்மேல வீச மறுபடியும் செருப்பை எடுத்து ஓழிச்சிவச்சிக்கிட்டாங்களா..நான்விடமாட்டேன்…அந்த சீட்டில இருக்கிற வாலிபர்கள் எல்லாம் கடைசி சீட்டுக்கு போங்க….நீங்க அதிக சேட்டைபண்ணுறீங்க..என்று கத்தினார். உடனே இளைஞர்கள் எழுந்து..பறிக்காதே..பறிக்காதே..எங்கள் உரிமையை பறிக்காதே . சுடிதார் சுதாவுக்கு பரிசு கொடு..ஏமாற்றாதே ஏமாற்றாதே.என்று. கோஷமிட..கண்ணாயிரம் திணறினார்.
முடியாது முடியாது…என்று கத்த..வாலிபர்களும் கத்த ..பயில்வான் அவர்களை அமைதிபடுத்த முயன்றவேளையில் துபாய்காரர்மேல் ஒரு செருப்புவந்துவிழ அவர் கோபத்தின் உச்சிக்கே சென்றார்.ஏய் கண்ணாயிரம்..போட்டியே வேண்டாமுன்னு சொன்னேன் நீ கேட்கல…கடைசியிலே பரிசு அறிவிச்ச ஏன்மேலவந்து செருப்புவிழுது…இனியும் பொறுக்கமுடியாது…சுடிதார்சுதா வாம்மா..நீதான் வெற்றிபெற்றாய்.இதோ நூறுரூபாய் பரிசு வாங்கிக்க என்றார்.
சுடிதார் சுதா எழுந்துவந்துபரிசைவாங்க துபாய்க்காரர் ஆர்வத்தில் கைகுலுக்கி பாராட்டினார். உடனே வாலிபர்களும் எழுந்து வந்து சுடிதார் சுதாவுக்கு ஐநூறு ரூபாய் பரிசு கொடுத்துவிட்டு அவரை கைகுலுக்கி பாராட்டிவிட்டு அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
.அவர்களை அனைவரும் ஆச்சரியமாக பார்க்க…கண்ணாயிரம் திகைத்துபோய் நின்றார். பயணிகள் கவனத்துக்கு…யாரும் செருப்பை கழற்றி போடாதீர்கள்…காலிலே போட்டுக்கொள்ளுங்கள்..விபரிதம் நடந்தால் நீங்கள்தான் பொறுப்பு..நான் ஏற்கனவே பல்வேறு பிரச்சினை காரணமாக செருப்பேபோடுவதில்லை…என்று சொல்ல கல்லூரி மாணவி கீழே கிடந்த தனது மற்றொரு செருப்பை ஏடுத்து சென்றார். தனது இரண்டு செருப்பையும் போட்டுக்கொண்டு அமர்ந்தார்.
துபாய்க்காரர் பரிசு கொடுத்த மகிழ்ச்சியில் இருக்கையில்அமர்ந்தபோது அவரது மனைவி முறைத்தபடி…பரிசு கொடுத்தீங்க சரி..ஏன் அந்த பொண்ணு கையைபிடிச்சி இருபது நிமிடமா குலுக்கிறுங்க…என்ன நினைச்சிக்கிட்டிருக்குங்க…வயசாகிட்டுன்னு தெரியுமா..தெரியாதா..என்று உலுக்க அவர்..அய்யோ..இருபது நிமிஷமா நான் கைகுலுக்கலம்மா..ஒருநிமிசந்தான்நான் கைகுலுகினேன்..மற்றதெல்லாம்..அந்த வாலிபராகள்தான்..என்னை சந்தேகப்படாதே என்றே கெஞ்சினார்.ஆனால் அவர்விடுவதாக இல்லை..தாக்குதல் தொடர்ந்தது…அவர் இதுக்கெல்லாம் காரணம் கண்ணாயிரம்தான் என்று நினைத்து கண்ணாயிரம் என்று கத்தினார். உடனே கண்ணாயிரம் என்ன ஆச்சு என்றபடி அவர் அருகில் ஓடிப்போய் நிற்க…துபாய்க்காரர் கண்ணாயிரத்தின் கைகளைபிடித்து குலுக்க..கண்ணாயிரம்…அடா..பெரிய மனுசன் பெரிய மனூசன்தான்…எப்படி நம்மை கைகுலுக்கி பாராட்டுறாரு….உங்க பாராட்டுக்கு..ரொம்ப மகிழ்ச்சி என்று சொன்னபோது துபாய்க்காரர் மெல்ல..கண்ணாயிரம் இத்தோடு என்னைவிட்டுறு…இனி எதுக்கும் என்னை இழுக்காதே…உன்னை கெஞ்சிக்கேட்டுக்கிறேன்.என்க கண்ணாயிரம்…சரி..சரி..நான் பாராட்டோ என்று நினைச்சென்..நம்மளை யாரு கைகுலுக்கி பாரட்டப்போறா என்று புலம்பியவாறு இருக்கையை நோக்கி செல்ல அவரை நோக்கி சுடிதார்சுதா ஓடிவந்தார்.என்னமோ ஏதோ என்று கண்ணாயிரம் திரும்பிபார்க்க..சுடிதார்சுதா…கொஞ்சம் நில்லுங்க..இந்த போட்டியில ஏனக்கு அறுநூருரூபாய் பரிசு. கிடைச்சிருக்கு.அதுக்கு நீங்களும் துபாய்க்காரருந்தான் காரணம்..உங்க இரண்டு பேருக்கும் கைகொடுக்கணும்…கொடுங்க கையை என்று சொன்னததும்..கண்ணாயிரம்…அம்மாடி…வந்தது ஆபத்து என்று ஓட சுடிதார்சுதா அவரை துரத்திக்கொண்டு ஓடினார்.

  • வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.