கண்ணாயிரத்தை நோக்கிபறந்த செருப்பு..(நகைச்சுவை கதை)
1 min read
The sandal flew towards Kannayiram/Comedy Story by Thabasukumar
23/7/2-022
கண்ணாயிரம் குற்றாலத்தின் அருமைபெருமைகளை பயில்வானிடம் கேட்டவாறு சுற்றுலாபஸ்சில் வந்துகொண்டிருந்தார். பண்டுருட்டியை தாண்டி பஸ் நெய்வேலிவந்தபோது இங்கிருந்துதான் எல்லா ஊருக்கும் கரண்டு போகுது .நெய்வேலி பேமசான ஊரு என்று பயில்வான்சொல்ல ..இந்த ஊருக்கு நெய்வேலின்னு எப்படி பெயர்வந்தது என்று கண்ணாயிரம் கேட்க..பயில்வானோ
இந்த பிரச்சினையிலே நாம மாட்டக்கூடாது என்று நினைத்து…துபாய்காரரிடம் கேளு..அவர் விளக்கமா சொல்வார் என்று ஒதுங்கிக்கொண்டார்.
உடனே கண்ணாயிரம் கண்களை மூடியபடி சிந்தனலயில் இருந்த துபாய்காரரை உசுப்பி..துபாய்சார் துபாய்சார்…நெய்வேலின்னு இந்த ஊருக்கு எப்படிபெயர்வந்தது என்று கேட்க அவர் கோபத்தில் பற்களை கடித்தார். ஆனாலும் கண்ணாயிரம் விடாமல்…துபாய்சார் உங்களுக்கு எல்லாம் தெரியுமுன்னு பயில்வான் சொன்னாரு..சொல்லுங்க..என்று அவர் தோளைபிடித்து குலுக்க…அவர் ஆவேசமாக…என்ன நினைச்சுக்கிட்டு இருக்க…ஏற்கனவே காந்தா பிரியாணியை ஏலமிட்டு என்னை படாதபாடுபடுத்திட்ட ..அதிலே இருந்து நான் தப்பியதே பேரியவிசியம்..இப்போ..நெய்வேலியை பிடிச்சி இழுக்கிற…ஆளைவிடுறா சாமி..
சுற்றுலா பஸ்சில் இருக்கிறவங்கிட்ட கேளு…சரியா சொல்லுறவங்களுக்கு நான் வேணுமுன்னா நூறு ரூபாய் பரிசு கொடுக்கிறேன்..போதுமா..என்றார்.
அதை கேட்ட கண்ணாயிரம் மகிழ்ச்சியுடன்..ஓ ..இதுபோதும்…மீதியை நான் பார்த்துக்கிறன்…என்றபடி ..போட்டியை ஆரம்பித்தார்.அன்பார்ந்த சுற்றுலாபயணிகளே…உங்களுக்கு வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த ஒரு கேள்வி. தமிழ்நாட்டில் மிகமுக்கியமான இடம் நெய்வேலி.இங்கு மின்சாரம் தயாரித்து எல்லா ஊருக்கும் அனுப்பப்படுகிறது..இப்ப கதைக்கு வருவோம்..இந்த ஊருக்கு நெய்வேலின்னு எப்படி பெயர்வந்தது..சரியா சொல்பவர்களுக்கு நூறுரூபாய் பரிசு…ஒவ்வொருவருக்கும் ஓருவாய்ப்புதான் வழங்கப்படும்..பதில் தெரிந்தவர்கள் சொல்லலாம்..சொல்லுங்க என்றார்.
உடனே ஒருவர் எழுந்து நான் பதில் சொல்லுறேன்..நெய்வேலியில் நிலக்கரி அதிகம்..அதனால..நெய்வேலின்னு பெயர்வந்தது..சரியா என்று கேட்டார்.
கண்ணாயிரம்..அது எப்படி..நிலக்கரி அதிகமுன்னா..கரியூருன்னுல்லா சொல்லியிருப்பாங்க..நெய்வேலின்னு சொல்லியிருக்கமாட்டேங்கல்லா..என்று கேட்டார்.
: ஆமா..என்றபடி அவர் அமர அடுத்து ஒருவாலிபர் எழுந்து நெய்வேலியிலிருந்து மின்சாரம் செல்வதால் நெய்வேலின்னு சொல்லியிருப்பாங்க…அப்படின்னு நான் நினைக்கிறேன் இது சரியா என்று கேட்க…கண்ணாயிரம்…இல்லை என்றார். மின்சாரம் சென்றால் மின்னூர் என்று சொல்லியிருக்க வேண்டும்..நெய்வேலின்னு எப்படி சொல்லியிருப்பாங்க என்று மடக்கினார்.
வேறு யாருக்கும் பதில் தெரியுதா என்று கண்ணாயிரம் கேட்க..யாரும் பதில் சொல்லமுன்வரவில்லை.என்ன யாருக்கும் பதில் தெரியலய்யா…என்ன சோதனை…என் சந்தேகத்தை தீர்க்க..இந்த பஸ்சில் ஒருவர்கூட இல்லையா..என்று கண்ணாயிரம் கேட்க …நான் பதில் சொல்லுறேன் என்று சுடிதார்சுதா எழுந்து நின்றார். அவளைப்பார்த்ததும் கண்ணாயிரம் திடுக்கிட்டபடி பூங்கொடியை பார்த்தார்.அவர் முறைக்க கண்ணாயிரம் என்ன சொல்வது என்று புரியாமல் விழித்தபடி ஒருவர் ஒரு போட்டியில்தான் கலந்துகொள்ளமுடியும்…நீங்க ஏற்கனவே காந்தாபிரியாணி ஏலத்துல கலந்துகிட்டு வெற்றிப்பெற்றிங்க…அதனால நெய்வேலி போட்டியில கலந்துகொள்ளக்கூடாது என்று உறுதியாக சொன்னார்.
அதை கேட்ட சுடிதார் கோபத்துடன்…காந்தாபிரியாணி ஏலம் நெய்வேலி போட்டி…இரண்டும் வேற வேற…அதனால நான் இந்த போட்டியில் கலந்து கொள்ள தடைவிதிக்கமுடியாது என்று வாதிட்டார்.கண்ணாயிரம் அது முடியாது…அது முடியாது..என்று சொல்ல சுடிதார் சுதா அவரைபார்த்து உதட்டை கடித்து.. தொலைச்சிருவேன் என்று ஒற்றைவிரலை காட்டினார்.
கண்ணாயிரம் பயந்துபோய் துபாய்க்காரரிடம் சென்று துபாய்சார்..துபாய்சார்…ஒரு ஆள் இரண்டு போட்டியிலே கலந்தூக்கலாமா..நீங்களே சொல்லுங்க..என்று அவரை உலுக்கினார்.
அவர் ஆத்திரத்தில் இதுக்குத்தான் சொன்னேன்..என்னை வம்புக்கு இழுக்காத…போ..பஸ்சிலிருப்பவர்களிடம் கேளு..என்னை மாட்டிவிடாத போ..என்று விரட்டினார்.
கண்ணாயிரம் வேறுவழியில்லாமல் ..பஸ்சில் இருந்தவர்களிடம் அன்பார்ந்த பெரியோர்களே..சுடிதார்சுதா இரண்டு போட்டியிலும் போட்டியிடலாமா சொல்லுங்க என்று கேட்க..ஒரு முதியவர் எழுந்து…சுடிதார்..சுதா அழகுக்கு…அவர் எத்தனை போட்டியிலும் கலந்துக்கலாம்..என்ஓட்டு சுடிதார்சுதாவுக்கே என்று கையை உயர்த்தி கோஷமிட்டார்.அதைத்தொடர்ந்து வாலிபர்களும் எழுந்து எங்கள் ஓட்டும் சுடிதார்சுதாவுக்கே என்று குரல் எழுப்ப கண்ணாயிரம் ஆடிப்போய்விட்டார். மீண்டும் துபாய்க்காரரை கண்ணாயிரம் பார்க்க…அவர் முறைக்க..கண்ணாயிரம் இனி வேறு வழி இல்லை..சுடிதார் சுதாவுக்கு இவ்வளவுபேர் ஆதரவா..அம்மாடி என்றபடி போட்டியை நடத்தாமல் பயில்வான் பக்கம்போய் அமர்ந்தார்.
உடனே இளைஞர்கள்…போட்டியை நடத்து..போட்டிய நடத்து…சுடிதார்சுதாவை புறக்கணிக்காதே…என்று கோஷமிட. கண்ணாயிரம்..ஆழம் தெரியாம காலைவிட்டுட்டோமே…என்ன செய்யுறது என்று மனைவி பூங்கொடியை பரிதாபமாக பார்த்தார். அவர் பதில் சொல்லாமல் திரும்பிக்கொள்ள கண்ணாயிரம் என்னசெய்வது என்று புரியாமல் திகைக்க வாலிபர்கள் மீண்டும் எழுந்து போட்டியை நடத்து…போட்டியை நடத்து…இல்லன்னா நாங்களே போட்டியை நடத்துறோம்…என்று கத்தினார்கள்.
கண்ணாயிரம் …அமைதி..அமைதி…இந்த கண்ணாயிரம் எப்பவும் முன்வைத்த காலை பின்வைக்கமாட்டேன்..போட்டியை நானே நடத்துகிறேன் என்று எழுந்துவந்தார்.பயில்வானும் நான் இருக்கிறேன்.தைரியமா போட்டியை நடத்து…என்று உற்சாகப்படுத்தினார்.
கண்ணாயிரம் முகத்தில்புது உற்சாகம் பொங்கியது…அன்புடையீர்..போட்டி தொடங்குகிறது…ஒரு கேள்விக்கு ஒருபதில்தான் சொல்லணும்..சந்தேகமாக பதில்சொல்லக்கூடாது…என்று நிபந்தனைவிதித்துவிட்டு…நெய்வேலிக்கு இந்த பெயர்வரக்காரணம் என்ன …இதுதான் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய கேள்வி…பதில் சொல்லுங்கள் என்றார்.சுடிதார் சுதா…தனது மேக்கப் முகத்தை கண்ணாடியில் சரிபார்த்துவிட்டு…நெய்வேலி என்ற ஊருக்கு அந்த பெயர் எப்படி வந்தது என்பது கேள்வி..அதற்கு நான் பதில் சொல்கிறேன். நெய்வேலி பழங்காலத்தில் காட்டுபகுதியாக இருந்தது. இங்கு ஏராளமான மாட்டுப்பண்ணைகள் இருந்தன. இதனால் நெய் அதிகமாக உருக்கி விற்கப்பட்டன. நெய் அதிகமாக இருந்ததால் இந்த ஊர் நேய்வேலின்னு அழைக்கப்பட்டது.சரியா என்று கேட்டார்.
கண்ணாயிரம் ஏற்றுக்கொள்ளவில்லை. நெய் அதிகமாக இருந்தால் நெய்யூருன்னுதானே சொல்லியிருக்கணும்..நெய்வேலின்னு எப்படி சொன்னாங்க என்று சந்தேகத்தை எழுப்பினார்.
அதை கேட்ட சுடிதார்சுதா அசராமல்..நெல் அதிகமாக இருந்ததால் நெல்லை திருநெல்வேலி என்று அழைக்கப்பட்டது.அதுபோல நெய் அதிகமாக இருந்ததால் நெய்வேலின்னு அழைக்கப்பட்டது…இது போதுமா என்று கேட்டார்.கண்ணாயிரம் அப்போதும் திருப்தி அடையாமல் இதற்கு ஆதாரம் எங்கே இருக்கு என்று கேட்க..சுடிதார் சுதா…தனது செல்போனை எடுத்து..நான் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டேன்..என்றவாறு கூகுளில் நெய்வேலி பெயர்காரணத்தை தேடி…கண்ணாயிரத்திடம் காட்டினார்.
அதை கண்ணாயிரம் படித்து பார்த்தார். பால் அதிமாக இருந்த ஊர் பாலூர்..நெய் அதிகமாக இருந்த ஊர் நெய்வேலி என்று குறிப்பிடப்பட்டிருந்தது…ஆ..எல்லாம் சரிதான்..ஆனா நீங்க சொந்தமா சொல்லாம…செல்போன ல் கூகுளை பார்த்து சொல்லியிருக்கீங்க…அதனால உங்களுக்கு பரிசு கிடையாது என்று சொல்லிவிட்டு ஓடிபோய் பயில்வான் பக்கம்போய் உட்கார்ந்தார்.
அவ்வளவுதான் வாலிபர்கள் கொந்தளித்தார்கள்.சரியாக பதில் சொன்ன சுடிதார் சுதாவுக்கு பரிசு கொடு..ஏமாற்றாதே…ஏமாற்றாதே…அறிவுச்சுடர் சுடிதார் சுதாவை ஏமாற்றாதே என்றுஉரக்க சொன்னார்கள்.
கண்ணாயிரம் பதில் சொல்லாமல் இருக்க..எதிர்ப்பு அதிகரித்தது.கண்ணாயிரமோ நாம கேள்வி கேட்க..பரிசு சுடிதார்சுதாவுக்கா …பூங்கொடி நம்மள தொலைச்சிடுவா என்று பயந்து போயிருக்க…கண்ணாயிரத்தை நோக்கி பறந்துவந்தது ஒரு செருப்பு.
-வே.தபசுக்குமார்.புதுவை.